ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்வதேன்?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி எண்: 1

 இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?

பதில்:

1. பலதார திருமணத்திற்கான விளக்கம்:

பலதார மணம் என்றால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளை கொண்டிருப்பது. பலதார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது வகை ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலிகமி (POLYGAMY) என்பார்கள். இரண்டாவது வகை ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள். முதலாவது வகை – அதாவது ஆண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது – இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை – அதாவது பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது – முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

2. உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான்.

இன்று உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். மற்ற எந்த வேதப் புத்தகமும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்டு திருமணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தவதில்லை. உலகில் இன்றைக்கு காணப்படும் – இந்துக்களின் வேதங்களான – இராமயணமோ – மஹாபாரதமோ – பகவத் கீதையோ – அல்லது கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளோ – அல்லது யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) கிலோ ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள தடை பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. மாறாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேதங்களின்படி ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமெனிலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் பிற்காலத்தில் வந்த இந்து சாமியார்களும் – கிறிஸ்துவ தேவாலயங்களும் – யூதர்களும்தான் – ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என கட்டளையிட்டு – பலதார மணத்திற்கு தடை விதித்தனர்.

இந்து வேதங்களில் குறிப்பிடப்படுபவர்களான தஸரதன் – கிருஷ்ணன் போன்றோர் – பல மனைவிகளை கொண்டிருந்ததாக – இந்து வேதப்புத்தகங்களே சாட்சியம் அளிக்கின்றது. ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்;ட மனைவிகளை கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பல மனைவிகளை கொண்டிருந்தார்.

பைபிளில் ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் – கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூறாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.

யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது ஆப்ரகாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர் பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.

1. பல தார மணம் செய்து கொள்வதில் இஸ்லாமியர்களைவிட இந்துக்களே முன்னனியில் உள்ளனர்:

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951 ஆம் ஆண்டுக்கும் – 1961 ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டபடி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் – இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதில் முன்னனி வகிக்கின்றனர்.

முந்தைய காலங்களில் இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமேத் தவிர. இந்து வேதங்கள் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.

இப்போது நாம் இஸ்லாம் ஏன் – ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.

2. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் – அனுமதியளிக்கிறது.

நான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.

குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.

மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் கொள்கைகளில் –  செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:

  1.  ‘ஃபர்லு’- கட்டாயக் கடமைகள்
  2. ‘முஸ்தகப் ‘ – பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை
  3. ‘முபாஹ் ‘- அனுமதிக்கப்பட்டவைகள்
  4. ‘மக்ரூ ‘ – அனுமதிக்கப் படவும் இல்லை – அதே சமயத்தில் தடுக்கப்படவுமில்லை.
  5. ‘ஹராம் ‘- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.

மேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் – ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.

3. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு – ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

இயற்கையிலேயே ஆணிணமும் – பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் – ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் – நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் – பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் – எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் – மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

4. கருவிலேயே பெண்குழந்தை என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதாலும் – பெண் சிசுவதைகளாலும் – இந்திய மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களே எண்ணிக்கையே அதிகம். மேற்படி நிகழ்வு இல்லையெனில் இந்தியாவிலும் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர்.

மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து

கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

5. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.

அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.

6. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது – நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.

ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல – பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.

உதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக மாறுவது’. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக’ மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.

இஸ்லாத்தில் ஆண்கள் கூடுதலாக நான்கு பெண்கள்வரை திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருந்தாலும் – முக்கியமாக பெண்களின் மானத்தை பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ளது.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்வதேன்?”
  1. intha mathri message ennaku daily anupavum it’s very useful message for all muslims

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *