அலிஃப் லாம் மீம் விளக்கம் என்ன?
இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி எண் 24.
குர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் – லாம் – மீம் – எனவும் – ஹாமீம் எனவும் – யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?
பதில் :
1) அலிஃப் – லாம் – மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ‘அல்-முகத்ததத்’ (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் – மற்றும் ஹம்ஸ் என்கிற எழுத்துக்களை இரண்டாக கருதினால்) எழுத்துக்கள் இருக்கின்றன. அதேபோல அருள் மறை குர்ஆனிலும் இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இவ்வாறு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் சில அத்தியாயங்களில் தனித்தும், சில அத்தியாயங்களில் இரண்டாகவும், சில அத்தியாயங்களில் மூன்று எழுத்துக்களாகவும், சில அத்தியாயங்களில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களாகவும் சேர்ந்து வரும்.
A) அருள்மறையின் கீழ்க்காணும் மூன்று அத்தியாயங்கள் ஒரே ஒரு எழுத்தினை கொண்டு துவங்குகின்றன.
-
அத்தியாயம் 38 ஸுரத்து ஸாத் – ஸாத் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
-
அத்தியாயம் 50 ஸுரத்துல் ஃகாஃப் – ஃகாஃப் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
-
அத்தியாயம் 68 ஸுரத்துல் கலம் – நூன் என்னும் எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
B) அருள்மறையின் கீழ்க்காணும் பத்து அத்தியாயங்கள் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
-
அத்தியாயம் 20 ஸுரத்துத் தாஹா ‘தா – ஹா’ என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
-
அத்தியாயம் 27 ஸுரத்துன் நம்ல் ‘தா – ஸீன்’ என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
-
அத்தியாயம் 36 ஸுரத்துல் யாஸீன் ‘யா – ஸீன்’ என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
-
அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின்
-
அத்தியாயம் 41 ஸுரத்து ஹாமீம் ஸஜ்தா
-
அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்ஷுறா
-
அத்தியாயம் 43 ஸுரத்துல் அஜ் ஜுக்ருஃப்
-
அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான்
-
அத்தியாயம் 45 ஸுரத்துல் ஜாஸியா
-
அத்தியாயம் 46 ஸுரத்துல் அஹ்காஃப்
மேலே குறிப்பிட்டுள்ள அருள்மறையின் பத்து அத்தியாயங்களும் ‘ஹா – மீம்’ என்னும் இரண்டு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
C) அருள்மறையின் கீழ்க்காணும் பதினான்கு அத்தியாயங்கள் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
-
அத்தியாயம் இரண்டு ஸுரத்துல் பகரா
-
அத்தியாயம் மூன்று ஸுரத்துல் ஆல இம்ரான்
-
அத்தியாயம் இருபத்து ஒன்பது ஸுரத்துல் அன்கபூத்
-
அத்தியாயம் முப்பது ஸுரத்துல் ரூம்
-
அத்தியாயம் முப்பத்து ஒன்று ஸுரத்துல் லுக்மான்
-
அத்தியாயம் முப்பத்து இரண்டு ஸுரத்துல் ஸஜ்தா ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் – லாம் – மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
-
அத்தியாயம் பத்து ஸுரத்துல் யூனுஸ்
-
அத்தியாயம் பதினொன்று ஸுரத்துல் ஹுத்
-
அத்தியாயம் பன்னிரெண்டு ஸுரத்துல் யூஸுப்
-
அத்தியாயம் பதின்மூன்று ஸுரத்துல் ராத்
-
அத்தியாயம் பதின்நான்கு ஸுரத்துல் இப்றாஹிம்
-
அத்தியாயம் பதினைந்து ஸுரத்துல் ஹிஜ்ர் ஆகிய ஆறு அத்தியாயங்களும் அலிஃப் – லாம் – ரா என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
-
அத்தியாயம் இருபத்து ஆறு ஸுரத்துல் அஸ்ஸுரா
-
அத்தியாயம் இருபத்து எட்டு ஸுரத்துல் கஸஸ் ஆகிய இரண்டு அத்தியாயங்களும் தா – ஸீன் – மீம் என்னும் மூன்று எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
D) அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
-
அத்தியாயம் ஏழு ஸுரத்துல் அஃராப் அலிஃப் – லாம் – மீம் – ஸாத் என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
-
அத்தியாயம் எட்டு ஸுரத்துல் அன்ஃபால் அலிஃப் – லாம் – மீம் – ரா – என்னும் நான்கு எழுத்துக்களை கொண்டு துவங்குகிறது.
E) அருள்மறையின் கீழ்க்காணும் இரண்டு அத்தியாயங்கள் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன.
-
அத்தியாயம் 19 ஸுரத்துல் மர்யம் காஃப் – ஹா- யா- அய்ன்-ஸாத் – என்னும் ஐந்து எழுத்துக்களை துவங்குகின்றன.
-
அத்தியாயம் 42 ஸுரத்துல் அஷ்-ஷுறா- ஹா- மீம் – அய்ன் -ஸீன் – காஃப் – என்னும் ஐந்து எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இந்த ஐந்து எழுத்துக்களும் அத்தியாயத்தின் இரண்டு வசனங்களான தொடர்ந்து வருகின்றன. அதாவது ஹா- மீம் என்னும் இரண்டு எழுத்துக்கள் முதல் வசனமாகவும், அதனைத் அடுத்து அய்ன் -ஸீன் – காஃப் -என்னும் மூன்று எழுத்துக்கள் இரண்டாவது வசனமாகவும் தொடர்கின்றன.
2. சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான விளக்கம்:
சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கான அர்த்தமும் நோக்கமும் தெளிவில்லாமல் இருந்தாலும், மேற்படி அருள்மறையில் காணப்படும் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு வௌ;வேறான பல விளக்கங்கள் அந்தந்த காலத்தில் வாழ்ந்து வந்த மார்க்க அறிஞர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.
-
-
மேற்படி எழுத்துக்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள சில வசனங்களுக்கு உண்டான சுருக்கமாக இருக்கலாம். உதாரணத்திற்கு அலிஃப் – லாம் – மீம் என்பதற்கு ‘அன-அல்லாஹு-ஆலம்’ என்பதின் முதல் எழுத்துக்கள் என்றும், ‘நூன்’ என்பதற்கு ‘நூர்’ (ஒளி) என்றும் பொருள் கொள்ளலாம் எனவும்,
-
மேற்படி எழுத்துக்கள் சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அல்ல. மாறாக அல்லாஹ்வின் பெயர்கள் அல்லது அவனது அடையாளங்களில் ஒன்றாக இருக்கலாம் எனவும்,
-
மேற்படி எழுத்துக்கள் ராகத்துடன் உச்சரிப்பதற்காக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும்,
-
அரபு எழுத்துக்களில் சிலவற்றுக்கு எண் மதிப்பு உள்ளதைப்போன்று, இந்த எழுத்துக்களுக்கும் முக்கியமான எண் மதிப்புகள் எதுவும் இருக்கக் கூடும் எனவும்,
-
இந்த எழுத்துக்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக (பின்னர் இறைவசனத்தை கேட்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக) இருக்கலாம் எனவும்,
-
3) அருள்மறையின் சுருக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உண்டான சிறந்த விளக்கம்:
மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துகளுக்குண்டான முக்கியத்துவம் குறித்து எண்ணற்ற விளக்கங்கள் நம்மிடையே இருந்தாலும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான இப்னு-கதீர் அவர்களின் விளக்கமும், ஷமக்ஸாரி, மற்றும் இப்னு-தைம்மியா ஆகியோர்களால் சரிகாணப்பட்ட விளக்கங்களும் பின்வருமாறு:
இயற்கையில் காணப்படும் சில அடிப்படை மூலக்கூறுகளால் ஆனது மனித உடல் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். களிமண்ணும், மண்ணும் இயற்கையில் உள்ள அடிப்படை மூலக்கூறுகளில் உள்ளதாகும். இருப்பினும் மனித உடல் மண்ணால் படைக்கப்பட்டது என்பதை எண்ணும்போது சிரிக்கத்தான் தோன்றுகிறது.
மனித உடலின் இயற்கையான மூலக்கூறுகளான மண்ணையும், களிமண்ணையும்;, தண்ணீரையும் நாம் எல்லோரும் எளிதில் பெறக்கூடிய நிலையில்தான் இருந்தாலும், மேற்படி இயற்கையான மூலக்கூறுகளைக் கொண்டு – மனித உடலை படைக்க நம்மால் முடியாது. மனிதன் இன்ன மூலக்கூறுகளை கொண்டுதான் படைக்கப்பட்டான் என்பதை நாம் நன்றாக அறிந்திருந்தும் படைப்பின் ரகசியம் பற்றி நாம் எதுவும் அறியாதவர்களாகத்தான் இருக்கிறோம்.
அதேபோன்று இறைத்தன்மை வாய்ந்த குர்ஆனை மறுப்பவர்களுக்கு – தன்னைப் பற்றி அறிவிக்கிறது. இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆன் அரபி மொழியிலேயே உள்ளது என்பது பற்றி பெருமை கொண்டிருக்கும் அரேபியர்களுக்கு தன்னைப் பற்றி அறிவிக்கிறது. அரேபியர்கள் அடிக்கடி உச்சரிக்கக்கூடிய எழுத்துக்களை கொண்டுதான் அருள்மறை குர்ஆன் அமைந்துள்ளது என்பதை அரேபியர்களுக்கு அறிவிக்கிறது.
அரேபியர்கள் தங்களது மொழியைப் பற்றி பெருமை கொள்ளக் கூடியவர்கள். அருள்மறை குர்ஆன் இறக்கியருளப்பட்டபோது, அரபு மொழி – புகழின் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். ஆலிஃப் – லாம் – மீம், யா – ஸீன், ஹா-மீம் போன்ற வார்த்தைகளை உள்ளடக்கி இறக்கியருளப்பட்ட குர்ஆன் மனித குலத்திற்கு அறை கூவல் விட்டது. அருள்மறை குர்ஆனின் இறதை;தன்மையில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பின், இது போன்று ஒரு நேர்த்தியான, அழகான அத்தியாயத்தை நீங்கள் கொண்டு வாருங்கள் என்று அருள்மறை குர்ஆன் மனித குலத்திற்கு சவால் விட்டது.
ஆரம்பத்தில் அருள்மறை குர்ஆன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்குமாறு சவால் விட்டது. மனிதர்களும் – ஜின்களும் தங்களுக்குள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டாலும் – அருள்மறை குர்ஆன் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்று சவால் விடுகிறது. இவ்வாறான சவால் அருள்மறை குர்ஆனின் 17வது அத்தியாயம் – ஸுரத்துல் பனீ – இஸ்ராயீலின் 88வது வசனத்திலும், 52வது அத்தியாயம் ஸுரத்துத் தூரின் 34வது வசனத்திலும் காணலாம்.
பின்னர் அருள்மறை குர்ஆன் மேற்படி சவாலை மீண்டும் மனிதர்களிடம் வைக்கிறது. அருள்மறை குர்ஆனின் 11வது அத்தியாயம் ஸுரத்துல் ஹுதின் 13வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று பத்து வசனங்களையாவது கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது. அருள்மறை குர்ஆனின் 10வது அத்தியாயம் ஸுரத்துல் யூனுஸின் 38வது வசனம் அருள்மறை குர்ஆனில் உள்ளது போன்று ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள் என்று மனித குலத்திற்கு சவால் விடுகிறது. இறுதியாக அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது அத்தியாயத்தின் மூலமாக மேற்படி சவாலை இன்னும் எளிதாக்குகிறது:
இன்னும், (முஹம்மது (ஸல் என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது – மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் – 23 – 24 வது வசனங்கள்.)
இரண்டு கலைஞர்களின் திறமையை மதிப்பிட வேண்டுமெனில், கலைஞர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான பொருளைச் செய்யச் சொல்லி, ஒரே விதமான மூலப் பொருள்களை வழங்க வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் இரண்டு பேரும் தையற்கலைஞர்கள் எனில், அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே விதமான துணியைக் கொடுக்க வேண்டும். அதபோலவே அரபி மொழியின் மூலப் பொருள் எதுவெனில் அலிஃப் – லாம் – மீம் – யா – ஸீன் போன்ற அரபி எழுத்துக்கள் ஆகும். இறைத்தன்மை வாய்ந்த அருள்மறை குர்ஆனின் மொழி உண்மையையே பேசும். ஏனெனில் அது அல்லாஹ்வின் வேதமாகும். அரபியர்கள் எந்த மொழியயைப் பற்றி பெருமை கொண்டிருந்தார்களோ அதே மொழிதான் அருள்மறை குர்ஆன் இறக்கப்பட்ட மொழியுமாகும்.
அரபியர்கள் தங்களது சொல்லாட்சி திறனுக்கும், நாவன்மைக்கும், அர்த்தமுள்ள உச்சரிப்புக்கும் பெயர் போனவர்கள். எப்படி மனித உடலில் உள்ள மூலக் கூறுகள் என்னவென்று நாம் அனைவரும் அறிவோமோ – அந்த மூலக் கூறுகளை நாம் எவ்வாறு பெறவும் முடியுமோ – அதுபோல -அருள்மறை குர்ஆனின் சுருக்கப்பட்ட அலிஃப் – லாம் – மீம் போன்ற எழுத்துக்களை அரபியர்கள் அனைவரும் அறிவார்கள்;. அந்த எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளையும் உருவாக்குவார்கள்.
மனித உடலில் என்னென்ன மூலக் கூறுகள் உள்ளன என்று நாம் அறிந்திருந்தாலும் மனித உடலை எவ்வாறு நம்மால் உருவாக்க முடியாதோ – அதுபோல அருள்மறை குர்ஆனில் உள்ள எழுத்துக்களை அரபியர்கள் அறிந்து வதை;திருந்தாலும் – அருள்மறை குர்ஆன் பயன்படுத்தவது போன்று சொற் பிரயோகங்களை அவர்களால் பயன் படுத்த முடியாது. இவ்வாறு அருள்மறை குர்ஆன் தன்னுடைய இறைத்தன்மையை நிரூபிக்கிறது.
4) ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கு பிறகும் அருள்மறை குர்ஆன் தனது இறைத்தன்மையை எடுத்து வைக்கிறது.
எனவேதான் ஒவ்வொரு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் அடங்கிய வசனம் முடிந்ததும் அருள்மறை குர்ஆன் தனது தனித் தன்மையை பற்றி எடுத்து உரைக்கிறது.
உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் முதல் இரண்டு வசனங்கள்:
‘அலிஃப் லாம் மீம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.’ (அல்குர்ஆன் – 2: 1-2).
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா