தொழுகையின் போது சூரத்துல் லஹப் ஓதலாமா?
கேள்வி: தொழுகையின் போது சூரத்துல் லஹப் ஓதக் கூடாது என்று சிலர் கூறுகிறார்களே! இது சரியானதா?
பதில் : திருமறையின் 111 ஆவது அத்தியாயமான சூரத்துல் லஹப் என்பது அல்-குர்ஆனின் ஓர் அங்கமாகும். நபி صلى الله عليه وسلم அவர்களின் வழிகாட்டுதலின் படி முஃமினான ஒருவர் தொழும் போது அல்-குர்ஆனின் எந்தப் பகுதியையும் ஓதுவதற்கு தடையில்லை. எனவே அவர் சூரத்துல் லஹபையோ அல்லது அவர் விரும்பிய எந்த சூராவையோ ஓதிக்கொள்ளலாம்.
இவ்வாறு ஓதக் கூடாது என்பவர்கள் அதற்குரிய ஆதாரமாக அல்-குர்ஆன் வசனத்தையோ அல்லது நபிமொழியையோ கூற வேண்டும். ஏனெனில் இறைவனின் மார்க்கத்தில் ஒன்றைக் கூடும் அல்லது கூடாது என்று கூறுவதற்கு அல்லாஹ் மற்றும் அவனுடைய திருத்தூதர் صلى الله عليه وسلم அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.