ஷைத்தான் மலக்கு இனமா, ஜின் இனமா?
இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி எண்: 33
குர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருப்பது சரியா?
நபி ஆதம் (அலை) அவர்களும் – இப்லீஸும் இருக்கின்ற வரலாற்று சம்பவங்கள் அருள்மறை குர்ஆனில் பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 34வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, ‘ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்’ என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல் குர்ஆன் 2:34)
மேற்படி பொருள் தரக் கூடிய அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களின் பெயர்களும் வசனங்களின் எண்களும் பின் வருமாறு:
அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் வசனம் 28 – 31
அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்ராயீல் வசனம் 61
அத்தியாயம் 20 ஸுரத்துல் தாஹா வசனம் 116
அத்தியாயம் 38 ஸுரத்துல் ஸாத் வசனம் 71 – 74.
ஆனால் அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 18 ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
அன்றியும், ‘ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள்’ என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக: அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜுது செய்தார்கள்;: அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தை சேர்ந்தவனாக இருந்தான்:… (அல் குர்ஆன் 18:50)
2. அரபிய முறையில் பின்பற்றுதல்:
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, ‘ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்’ என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல் குர்ஆன் 2:34)
மேற்படி அருள்மறை குர்ஆனின் மொழியாக்கத்தை நாம் மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் – இப்லீஸும் மலக்கு இனத்தைச் சார்ந்தவன் தானோ என்று நம்மை எண்ணத் தூண்டும். அருள்மறை குர்ஆன் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரபி இலக்கணத்தில் ஒரு கட்டளையை பின்பற்றுவதற்கென்று ஓர் முறை உள்ளது. அதற்கு ‘தக்லீப்’ என்று பெயர். மேற்படி முறைப்படி – பெரும்பாலானவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய கட்டளை -சிறுபான்மையாக உள்ளவர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு 100 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பறையில் 99 பேர் ஆண்களும் மீதி ஒருவர் மாத்திரம் பெண்ணாகவும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண் மாணவர்கள் அனைவரும் எழுந்திருங்கள் என்று நான் அரபி மொழியில் சொன்னால், அது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பெண் மாணவிக்கும் பொருந்தும். பெண் மாணவியும் எழுந்திருக்க வேண்டும் என்று நான் அரபியில் தனியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
அதுபோலத்தான் அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனத்திலும், அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிடும்போது – இப்லீஸும் அங்கு இருந்ததால் – இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளை இடாத காரணத்தால் – இப்லீஸும் – மலக்கு இனமோ என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. ஆனால் இப்ல{ஸ் மலக்கு இனம் இல்லை. அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்பது அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறியலாம். அருள்மறை குர்ஆனின் மற்ற எந்த வசனத்திலும் இப்ல{ஸ் மலக்கு இனம் என்று குறிப்பிடவில்லை என்பதாலும், அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்று தெளிவாக குறிப்பிடுவதாலும் – இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
3. ஜின்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவோ அல்லது ஏற்காமல் இருக்கவோ உள்ள சுதந்திரம் உண்டு.
அடுத்து ஜின்கள் சுதந்திரமானவை. அவைகள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்கவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கவோ உள்ள உரிமை உண்டு. ஆனால் மலக்குகளுக்கு அல்லாஹ் அற்த உரிமையை வழங்கவில்லை. மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படக் கூடியவை. எனலே இப்லீஸ் மலக்கு இனமாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கும் செயலுக்கே இடமில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை இப்லீஸ் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததிலிருந்தும் – இப்லீஸ் மலக்கு இனமல்ல, ஜின் இனம்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா