வெகுமதிகள் நிறைந்த வார்த்தைகள்
அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.
கலீமதுத் தவ்ஹீதின் சிறப்புக்கள்:
‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு வஅன்ன ஈஸா அப்துல்லாஹி வப்னு அமதிஹி வகலிமதுஹு அல்காஹா இலா மர்யம வரூஹும் மன்ஹு வஅன்னல் ஜன்னத ஹக்குன் வஅன்னன் நார ஹக்குன்’
(வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் என்றும், நிச்சயமாக ஈஸா அல்லாஹ்வின் அடியாரும் அவனது அடியாளின் மகன் என்றும், மர்யமிற்கு வார்த்தையாக அவன் போட்டான் எனவும், அவனது ரூஹில் நின்றும் உள்ளவர் எனவும், சுவர்க்கம், நரகம் உண்மையெனவும் நான் சான்று பகருகிறேன் என எவர் கூறுவாரோ, அல்லாஹ் அவரை சுவர்க்கத்தின் எட்டு வாயில்களில் விரும்பிய வாயலினூடாக நுழையச் செய்வான்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).
‘அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’
(வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும், அவர் விரும்பிய வாயலினூடாக நுழைய முடியும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
கடை வீதியில் நுழையும் ஒருவர் ‘லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீது வஹுவ ஹயியுன் லா யமூது பியதிஹில் ஹயிரு வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.’ என்று கூறுவாரானால் ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அவருக்கு பதியப்படும். அவரது ஆயிரம் ஆயிரம் பாவங்கள் மன்னிக்கப்படும். அவரது ஆயிரம் ஆயிரம் பதவிகள் உயர்த்தப்படும். அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, ஹாகிம். ஷைக் அல்பானி (ரஹ்) இந்த ஹதீஸை ஹஸன் எனக்கூறுகிறார்கள்.
‘லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.’ என்பதை எவர் ஒவ்வொரு நாளும் நூறு தடவை ஓதி வருவாரோ, அவருக்கு பத்து அடிமைகள் உரிமையிட்ட நன்மை கிடைக்கும். இன்னும் அவருக்கு நூறு நன்மைகள் பதியப்படுவதுடன் அவரது நூறு பாவங்களும் மன்னிக்கப்டும். அவருக்கு அன்றைய நாளில் மாலை வரை ஷைத்தானின் தீங்ககுளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். இவரை விட சிறந்த ஒருவர் வர முடியாது இதை விட அதிகம் செய்தவரைத் தவிர.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
எவர் அதானை செவிமடுத்ததன் பின் ‘அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. ரழீது பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதி ரஸுலன் வபில் இஸ்லாமி தீனன்.’ எனக் கூறுவாரோ அவரது முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).