சாஸ்த்திரம் மற்றும் ஜோசியம் பார்க்கலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும், சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள், குடும்பத்தினர்கள், அனைவர் மீதும் உண்டாவதாக!
மார்க்கத் தீர்ப்புக்கள் – கேள்வி 01 : சாஸ்த்திரக்காரர்கள், ஜோசியம் பார்ப்பவர்களிடம் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
பதில் : சூனியக்காரர்கள், சாஸ்த்திரக்காரர்கள், ஜோசியம் பார்ப்பவர்களிடம் செல்வதும், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதும் குற்றமாகும்.
‘எவர் எதிர் காலத்தை கணித்துச் சொல்லக்கூடிய ஜோசியக்காரனிடம் போய் ஏதாவது கேட்பானானால் அவனது நாற்பது நாட்களுடைய தொழுகை ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
‘எவன் எதிர் காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடிய ஜோசியக்காரனிடம் போய் அவன் சொல்வதை உண்மைப்படுத்துவானானால் அவன் முஹம்மத் நபியின் மீது அருளப்பட்டதை நிராகறித்தவனாவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்லுஸ்ஸுனன்).