சமாதியின் மீது எழுதலாமா?
சமாதியின் மீது அல்குர்ஆன் வசனங்களையோ அல்லது இறந்தவரின் முகவரியை எழுதலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 03 : ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அவரது கப்ரின் (சமாதியின்) மீது அல்குர்ஆனீய வசனங்களை எழுதி அல்லது அங்கு அடக்கப்பட்டவரின் பெயர், ஊர், திகதி ஆகியவை எழுதுவதற்கு அனுமதி இருக்கிறதா?
பதில் : சமாதியின் மேல் அல்குர்ஆனீய வசனங்களை எழுதுவதற்கோ அல்லது வேறு எதையும் பலகையின் மீதோ, தகட்டின் மீதோ எழுதுவதற்கு அனுமதி இல்லை. ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
“நபிகளார் (ஸல்) அவர்கள் கப்ருகளின் மீது பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதை கட்டுவதையும் தடை செய்தார்கள்’ (முஸ்லிம், திர்மிதி)
நஸாயியின் ஓர் அறிவிப்பில் ‘அதன் மீது எழுதுவதையும்’ என்று இடம்பெற்றுள்ளது.