மவ்லூதுகளில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடலாமா?
நபி (ஸல்) மற்றும் அவ்லியாக்களின் மவ்லூதுகளில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 06: நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சிகளில், அது அல்லாத மவ்லூத் நிகழ்ச்சிகளில் அறுக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடலாமா?
பதில் : நபி (ஸல்) அவர்களின் பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சியாக இருக்கலாம், வேறு எந்த அவ்லியாவுடைய பெயரில் நடைபெறும் மவ்லூத் நிகழ்ச்சியாக இருக்கலாம், அது அல்லாஹ் அல்லாத ஒருவரின் பெயரில் அறுக்கப்படக் கூடியதாகும்.
இது தெளிவான ஷிர்க். அதை சாப்பிடுவது அனுமதிக்கப்பட மாட்டாது.
‘எவர் அல்லாஹ் அல்லாத ஒருவனின் பெயரில் அறுத்துப் பலியிடுகிறானோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.