இஸ்லாத்தின் பார்வையில் இரகசியம் பேசுவது
மூன்றாம் நபரை விடுத்து இருவர் மட்டும் ரகசியம் பேசுவது கூடாது!
அல்லாஹ் கூறுகிறான்: –
“இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது”. (அல்-குர்ஆன்).
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: –
”மூன்று பேர்கள் இருந்தால், மூன்றாம் நபரை விடுத்து இரண்டு பேர்கள் இரகசியம் பேச வேண்டாம்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: –
”நீங்கள் மூவராக இருந்தால் ஒருவரை மட்டும் விட்டு விட்டு, இருவர் ரகசியம் பேச வேண்டாம். ஆனால் மக்களோடு சேர்ந்திருந்தாலே தவிர. இது அவரை கவலைப்படச் செய்யும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்),