தொழுகையை அதற்குரிய நேரம் வருமுன் தொழலாமா?
அலுவலக வேலையின் காரணமாக தொழுகைகளை அதற்குரிய நேரம் வருவதற்கு முன் நாமே பாங்கு, இகாமத் சொல்லி தொழுது கொள்ளலாமா?
அல்லாஹ் கூறுகிறான் : –
“நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
எனவே ஒருவரின் அலுவலக பணியின் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதாவது வேலையின் காரணமாகவோ கடமையான தொழுகைகளை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னரே முற்படுத்தி தொழுவது என்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.
ஆனால் பிரயாணத்தின் போதும் கடும் மழை, புயல் காற்று போன்றவற்றின் போது நபி (ஸல்) அவர்கள் சில தொழுகைகைளை முற்படுத்தி தொழுததாக அறிய முடிகிறது. பார்க்கவும் : சேர்த்து, சுருக்கி (ஜம்வு, கஸர்) தொழுதல்