இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம் – Part 2
இறைவனின் பேரருளால் இன்று இஸ்லாம் மேற்கத்திய உலக மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது. குடும்பப் பாசப் பிணைப்பு, சமூகக் கட்டுப்பாடு, சமூகப் பரீஷ்காரம், முதலியவைகள் இல்லாத முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டடுள்ள அந்நாடுகளில் உள்ள மக்கள் இஸ்லாத்தில் இணைய விரும்பினால் அதைத் தடுக்க அவர்களின் குடும்பத்தினரோ, அந்நாட்டு அரசுகளோ முனைவதில்லை. அந்நாட்டு மக்கள் இஸ்லாத்தை நன்கு அறிந்து, உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார்கள். அம்மக்களில் ஐந்து பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களில் நான்கு பேர் பெண்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு உண்மையான மதிப்பும், கவுரவமும், பல உரிமைகளும் இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு என்று தெரிந்து வருகிறார்கள். கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்கர்களின் திருச்சபையின் அறிக்கையின்படி, இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் உலகின் பெரும்பான்மை மார்க்கமாக அமையும்.
இத்தகைய வேகமான இஸ்லாமிய வளர்ச்சியை மேற்குலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? மேற்குலகத்தின் ஆட்சியாளர்களும் அறிவு ஜீவிகளும், உலகின் மிகப் பெரிய ஊடககங்கள், செய்தித்தாள்கள், டெலிவிஷன் சாட்டிலைட் சேனல்கள் இவைகளில் பெரும்பான்மையானவற்றைத் தம் கைகளில் வைத்துக் கொண்டு ‘பொய் கருத்துருவாக்கம்’ செய்து கொண்டும், இஸ்லாமியர்களுக்கு, ‘பயங்கரவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’, என்ற இழிவுப் பெயர்களை சூட்டியும், தமது மக்களை நம்ப வைத்தும் வருகின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் ‘கோயபல்ஸ்’ தத்துவம் – அதாவது “பொய்யை திரும்ப திரும்ப ஆயிரம் முறை கூறினால் அது உண்மையைப் போல் தோற்றமளிக்கும்” – என்றாலும், இஸ்லாத்தின் உண்மை நிலையை – சாந்தி மார்க்கத்தை – மறைத்துவிட முடியவில்லை!
‘எவர்கள் நேரிய வழி தங்களுக்குத் தெளிவாகிவிட்ட பிறகு நிராகரிக்கவும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கவும், தூதரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்களோ, அவர்களால் உண்மையில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் இழைத்திட முடியாது. மாறாக, அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் பாழாக்கிவிடுவான்’ (அல்-குர்ஆன் 47:32)
‘நாகரீகம்’ என்ற போர்வையிலும், பெண் விடுதலை என்ற மாயையிலும் அந்நாட்டு நிராகரிக்கும் பெண்களை கெடுத்து, அவர்களை போகப் பொருளாக மட்டும் மதித்து, அவர்களைக் கொச்சைப்படுத்தி தம் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் மேற்கத்திய நிராகரிக்கும் ஆண் வர்க்கம் இஸ்லாத்தை இழித்துக் கூறுவதில் வியப்பில்லை தான்! ஏனெனில் இஸ்லாம் அங்கு முழுமையாகப் பரவி விடுமானால், அவர்களின் காமக் களியாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். இளம் கன்னிப் பெண்கள் எவனோ ஒருவனிடம் உயிரினும் மேலான தன்னுடைய கற்பையும், மானத்தையும் இழந்துவிட்டு வேறொருவனை வெட்கமின்றி திருமணம் செய்யமாட்டார்கள்! நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு, பலாத்காரம் என்று பெண்ணினத்தை அழிப்பவனுக்கு மரண தண்டனை அளிக்கப்படும்! பெண்கள் பர்தா அணிந்து கண்ணியமாய் வெளியில் தோற்றமளிப்பர். மதுக் கூடங்களும், டிஸ்கோ நடனங்களும், நீச்சல் குளங்களும் இன்னும் ஆண்-பெண் தகாத உறவுக்கு வழிவகுக்கும் அத்துனைக் கூடங்களும் மூடப்படும்! மேலும் சூதாட்டக் கேஸினோக்களும், லாட்டரி சீட்டு சுரண்டல்களும், அடியோடு ஒழிக்கப்படும்! இன்னும் கருப்பு பொருளாதாரத்திற்கு (Black Economy) ஆதாரமான எல்லா நடவடிக்கைகளும், அவைகளை ஊக்குவிக்கும் சமுதாய ஒட்டுண்ணிகளும் (Social Parasites) கூண்டோடு களையெடுக்கப்படுவார்கள்! சமுதாயமும் நாடும் சுபிட்ச நிலையை அடையும்!
இவைகள் எல்லாம் இஸ்லாமிய ஆட்சி வந்துவிட்டால் ஒரு நாட்டில் சாத்தியப்படுமா என்றால் – அந்நாட்டின் ஆட்சியாளர்கள் தூய்மையான இஸ்லாத்தை, இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் – நபிவழி இவ்விரண்டையும் பலமாக பற்றிப் பிடித்து தன சுயவிருப்பு, வெறுப்புக்கு ஆட்படாதவராகவும் ஆட்சி செய்தால் சாத்தியப்படும். ஆனால் தற்போது மேற்கத்திய ஆட்சியாளர்களாய் இருப்பவர்கள் ஒரு தூய இஸ்லாமிய சுய நிர்ணய மக்கள் ஆட்சியை – மக்களின் பிரதிநிதியான கலீபா – ஆட்சியை உலகில் எந்த நாட்டிலும் கொண்டு வர அனுமதிக்க மாட்டார்கள். அப்படி ஒரு மாதிரி இஸ்லாமிய ஆட்சி (Model Islamic Government) ஒன்று தோன்றிவிடுமானால், அதன் குடிமக்கள் தூய இஸ்லாமிய நெறியினை பின்பற்றுவார்களானால் – அதன் வேகமும், வளர்ச்சியும், மிகவும் ஆச்சர்யப்படத்தக்கதாகவும், வரலாற்றில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது திரும்ப நிகழ்வது போல இருக்கும். ஆம்! நமது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உலகில் மீண்டும் தோற்றுவித்த இஸ்லாம், அவர்களின் 23 வருட தூதுத்துவ வாழ்க்கையில் அன்றைய அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவியது. தோன்றிய 50 வருடங்களுக்குள் பக்கத்திலுள்ள ஆப்ரிக்கா, ஐரோப்பியா கண்டங்களில் விரிந்தது. தூய இஸ்லாமிய ஆட்சி மேலோங்குமானால் இச்சரித்திரம் திரும்பவும் நிகழும் என்பது மேற்கத்திய அறிவு ஜீவிகளின் உள்மன பயம்! ஆகவேதான், இத்தகைய அதிரடி உலக மாற்றங்களை சாத்தியப்படுத்தும் இஸ்லாம் வேகமாக பரவாமலிருக்க எந்தந்த வகையில் தடுக்க முடியுமோ அவ்வகையிலெல்லாம் அவ்வரசுகள் தடுத்து வருகின்றன. தற்சமயம், பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸி தம் நாட்டிலுள்ள முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதும் இது போன்ற ஒன்றே!
இனி ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் பல நாடுகளில் மனிதவளம் எந்நிலையில் உள்ளது என்று பார்ப்போம். பெண் கருவுறுந்தன்மையை அட்டவனையில் நோக்கினால் நைஜர் என்னும் நாடு முதல் இடத்தைப் பிடித்து ஒரு பெண்ணுக்கு 7.19 குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளான புரூண்டி, காங்கோ குடியரசு, மாலி, அங்கோலா, சோமாலியா, நைஜீரியா, எத்தியோப்பியா, கென்யா, சூடான் ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது இடத்திலிருந்து பத்தாவது இடம் வரை பிடித்திருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பெண் கருவுறுந்தன்மை மிகுதமாக இருப்பதற்கு காரணம் அந்நாடுகள் பின்தங்கிய ஏழை நாடுகளாய் இருப்பதே! மேலும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது விவசாய வேலைகள் மற்றும் ஆடு மாடு வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபடும் குடும்பங்களுக்கு உதவியாக உள்ளது. கடின உழைப்பு மிக்க பெண்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஒரு சுமையாகவே நினைப்பதில்லை. குழந்தை இறப்பு விகிதம் அதிகமாய் இருக்கும் இந்நாடுகளில் அதை ஈடு செய்யும் பொருட்டு அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது பொதுவாக நடைபெறுகிறது. முஸ்லிம்கள் அதிகமில்லாத ஆப்ரிக்க நாடுகளிலும் இஸ்லாம் இப்பொழுது பரவிவருகிறது.
ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் எடுத்துக் கொண்டால் பெண் கருவுறுந்தன்மை முறையே 2.81 மற்றும் 3.52 ஆக உள்ளன. இவைகள் குறைந்த அளவான ஒரு பெண்ணுக்கு 2.11 குழந்தைகள் என்ற அளவை விட அதிகமாக இருப்பதால் இந்நாடுகளுக்கு ஆபத்தில்லை. குடும்பக் கட்டுப்பாடு கோஷங்களான ‘நாம் இருவர் நமக்கிருவர்’ மற்றும் ‘ஒரு குழந்தை போதுமே!’ என்பதெல்லாம் இந்தியாவில் தற்போது மறைந்து விட்டது அல்லது மறைந்துக் கொண்டு வருகிறது.
ஆனால் சீனா மற்றும் ரஷ்ய நாடுகளில் பெண் கருவுறுந்தன்மை முறையே 1.73 மற்றும் 1.34 ஆக உள்ளன. இவைகள் குறைந்த பட்ச அளவைவிட மிகக் குறைவாக இருப்பதால் இந்நாடுகள் பயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் சீன அரசின் ‘ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை’ என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையால் அந்நாடு பெரும்பாதிப்பை சந்தித்திருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மடடுமே பெற்றுக்கொள்ள அனுமதி என்ற கொள்கையால், ஒவ்வொரு குடும்பமும் தனக்குப் பிறகு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். கருவுற்ற சீனப் பெண்கள், ஸ்கேன் மூலம் தன் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்துக் கொண்டவுடன், ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள். மாறாக பெண் குழந்தையாக இருந்தால் கருவைக் கலைத்து விடுகின்றனர். இதனால் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சமமாக இல்லாமல் ஆண் விகிதம் மட்டும் அதிகமாகி விட்டது.
1970 ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ‘ஒரு குழந்தை’ குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம், பெண்கள் சதவிகிதம் குறைவதற்கு காரணமாகி விட்டது. ஒரு சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருந்தால் அச்சமுதாயத்தில் குழந்தைப் பிறப்பும் குறைவாகவே இருக்கும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இவ்வொரு குழந்தைச் சட்டத்தால்’ தற்சமயம் திருமண வயதை அடைந்த ஆண்களில் அநேகருக்கு பெண்கள் கிடைக்காது அல்லாடுகின்றனர். இதனால் அண்டை நாடுகளான தென் கொரியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை மணமுடித்து தம் சீன நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ‘ஒருங்கினைந்த ஐரோப்பா’வில் (Europian Union) 31 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவைகளில் தற்கால நிலைமையையும், எதிர்காலத்தில் என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதையும் சற்று ஆராய்வோம்! ஐரோப்பாவின் ஒரு முக்கிய நாடான பிரான்ஸில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன. தற்போது உள்ள மக்கட்தொகையில் பொதுவாக பிரான்ஸில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சவிகிதம் பேர் உள்ளனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!
இனி ஐக்கிய இராஜ்ஜயத்தை (United Kingdom) எடுத்துக்கொள்வோம். கடந்த 30 வருடங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் முஸ்லிம்களின் மக்கள் தொகை 82,000 ல் இருந்து 2.5 மில்லியன்கள் ஆகியிருக்கிறது. இது 30 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அந்நாட்டில் ஓராயிரத்திற்கு அதிகமான பள்ளிவாசல்கள் தற்போது உள்ளன. அதில் பல பள்ளிவாசல்கள் முன்னர் கிறிஸ்தவ கோயிலாக இருந்தவை!
அடுத்து நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன. மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.
இன்றைய ரஷ்யாவில் மொத்தம் 23 மில்லியன் (2.3 கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது 5 ரஷ்யர்களில் ஒருவர் முஸ்லிம் என்ற விகிதத்தில் உள்ளது. மேலும் இன்னும் சில வருடங்களில் 40 சதவிகிதம் ரஷ்ய படைவீரர்கள் முஸ்லிம்களாக இருப்பர்.
தற்போதைய பெல்ஜியத்தில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றன. பெல்ஜியம் அரசின் கூற்றின்படி, இன்னும் 17 வருடங்களில், ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறப்பார்கள்.
ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி, அந்நாட்டின் மக்கட்தொகை சுருக்கத்தை இனி ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது! மேலும் கீழ் நோக்கி இறங்கும் சுருள் போன்று (downward spiral) மக்கட்தொகையை இனி அதிகப்படுத்தவே முடியாது என்கிறது அவ்வரசு. இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்.
லிபியா நாட்டின் அதிபர் மாமுர் அல்கடாபி பின்வருமாறு கூறுகிறார்: –
‘ஐரோப்பாவில், வாளின்றி, துப்பாக்கியின்றி, போரின்றி அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியைத் தருவான் என்ற அத்தாட்சிகள் தெரியத் தொடங்கிவிட்டன. எங்களுக்கு பயங்கரவாதிகள் தேவையில்லை; குண்டு வைத்துத் தகர்க்கும் தற்கொலைப் படையினர் தேவையில்லை; தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’
ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.
கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து, அதில் 1.2 மில்லயன் பேர்கள் குடியேற்றப்பட்டார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United States of America) உள்ள குடிமக்களின் பெண் கருவுறுந்தன்னை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் ஆகும். இவ்விகிதம் இலத்தீன் அமெரிக்கர்களின் குடியேற்றத்தால் 2.11 ஆக அதிகரித்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது.
மேற்கூறப்பட்ட தற்கால நிகழ்வுகளும் எதிர்கால கணிப்புகளும் ஒரு பேருண்மையை நமக்குத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான்:
‘மனிதர்களே! நீங்கள் தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கிறீர்கள்; ஆனால் அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்! அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று’ (அல்-குர்ஆன் 25:15-17)
இம்மாமறை வசனத்தின்படி, நிராகரிக்கும் போக்குடைய மேற்குலக ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் மேற்குலகில் உள்ள குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நிராகரிக்கும் மக்களையும் முற்றாக மாற்றி அகற்றிவிட்டு பிறிதொரு சமுதாயத்தை, தனக்கும் தன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்த முஸ்லிம் சமுதாயத்தை மேலோங்கச் செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை (Initial Stage) வல்ல அல்லாஹ் துவக்கிவிட்டான். இனிவரும் காலங்களில் அல்லாஹ்வின் வலிமையையும் அவனது ‘சொல்லின்’ (அல்-குர்ஆன்) உண்மையையும் மேற்குலகம் காணத்தான் போகிறது. ஆனால் அம்மாறுதல்களை முழுவதற்கும் காண முடியாமல் அந்நிராகரிப்போர் – அவர்களே காணாமல் போய்விடுவார்கள்.
‘எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்’ (அல்-குர்ஆன் 47:34)
நிராகரிக்கும் மக்களாக முஸ்லிம் அல்லாத மக்களும், இறைவழியிலிருந்து தடுக்கக் கூடியவர்களாக அந்நாட்டின் ஆட்சியாளர்களும் இருப்பதால் மேற்கண்ட இவ்வசனம் இவர்களுக்குச் சாலப்பொருந்தும். இந்நிராகிர்போர் இவ்வுலகிலும் இழிவடைந்து, மறுமையிலும் மன்னிக்கப்படாது நரகினைச் சென்றடைவார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
நாம் இருவர் நமக்கு இருவர்!
சிறு குடும்பம் சீரான வாழ்வு!
ஒருவனுக்கு ஒருத்தி!
ஒன்றே பெறுவோம் ஒளிமயமாக வாழ்வோம்!
அரசாங்கத்தின் இத்தகைய குரல்களெல்லாம் ‘எங்கேயோ கேட்டகுரல்’ மாதிரி காணாமல் போய்விட்டன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் மனிதவளமே இன்றியமையாதது என்பதை இந்தியா உலகிற்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
சிறந்த ஆய்வுக்கட்டுரை! ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!
allahu ellorkum hidayath tharanum.