நசுங்கிய நடுநிலை சொம்புகள்
இஸ்லாத்தைப் பொருத்தவரை இரண்டு தான்!
ஒன்று சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கினிற நேர்வழி!
மற்றொன்று நரகிற்கு வழிகோலுகின்ற வழிகேடுகளான ஏனைய வழிகள்
இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது! இவ்விரண்டிற்குமடைப்பட்டது என்று ஒன்றுமில்லை!
ஒருவர் நேர்வழியில் இருக்க வேண்டும்! அல்லது வழிகேட்டில் இருக்க வேண்டும்!
மூன்றாவதாக நான் இரண்டையும் பின்பற்றுகிறேன் ஒன்று ஒருவர் கூறினால் அவர் ஒரு நல்ல மன நல மருத்துவரைத் தான் பார்க்கவேண்டும்!
அது போலத்தான்,
பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்றவை உள்ளிட்ட அணைத்து விதமான வணங்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்து அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதல்களை மட்டுமே தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற என்ற கொள்கையுடையவராக இருக்கின்ற ஒருவர்
அதே நேரத்தில்
பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்ற வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்துவதோடல்லாமல் அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) வழிமுறைகளைப் புறக்கணிப்பதோடு அல்லாமல் மற்றவர்களின் வழிமுறைகளை அல்லாஹ்வின் வழிமுறைகளைக் காட்டிலும் அதிகமாகப் பின்பற்றுகின்றவராக ஒருபோதும் இருக்கமாட்டார்.
ஒருவர் அதுவும் சரி! இதுவும் சரி என்றால் அவர் உடனடியாக மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்!
இஸ்லாத்தைப் பொருத்தவரை ஆத்துல ஒரு கால்! சேத்துல ஒரு கால்! என்ற இரண்டும்கெட்டான் நிலை என்பது கிடையாது!
அல்லாஹ் கூறுகின்றான்:
“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான் “(அல்-குர்ஆன் 2:208)
இஸ்லாத்தின் ஆரம்ப கால முதற்கொண்டே இஸ்லாத்தை எதிர்க்க இயலாத கோழைகளில் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது போல பாவனை காட்டிக்கொண்டு இஸ்லாத்தினுள்ளே இருந்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக தங்களால் ஆன அனைத்தையும் செய்தனர்! இத்தகைய முனாஃபிக்குகளின் செயல்களை அல்லாஹ் அவ்வப்போது மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிக்கொண்டே இருந்தான்!
ஆனால் தற்காலத்திய முனாஃபிக்குள் சற்று வித்தியாசமானவர்களாக இருக்கின்றனர்! இவர்கள் பல நிலைகளில் வலவாறாக தங்களது முனாஃபிக் தனத்தை வெளிப்படுத்துவர்! இவர்களைப் பற்றி ஒவ்வொருவராகப் பார்ப்போம்!
சில முனாஃபிக்குகள் இருக்கின்றனர்! அவர்களுக்கு மறுமையின் நற்பலன்களைவிட இவ்வுலகின் மீதும் அதன் அற்பமான இன்பங்களின் மீதும் அலாதி பிரியம்! இவர்கள் தங்களுக்கு எங்கு ஆதாயம் அதிகமாக கிடைக்கிறதோ அங்கு ஒட்டிக் கொள்வார்கள்! இவர்கள் தங்களின் அரைகுறை அறிவைக் கொண்டு ஏகத்துவவாதிகளை எதிர்கொள்ள இயலாததாகையால் நானும் உங்களில் ஒருவன் தான் என அவ்வப்போது ஏகத்துவவாதிகளிடம் கூறுவதுண்டு! ஆயினும் அவ்வப்போது குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான சடங்கு சம்பிரதாயங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டு நான் உங்களில் ஒருவன் தான் என அவர்களிடமும் காட்டிக் கொள்வதுண்டு!
இன்னும் சிலர் தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக்கொள்வர்! நீங்கள் கூறுவதெல்லாம் சரி தான்! ஆனால் உங்களின் பிரச்சாரத்தினால் நமது சமூகத்தில் பிளவு ஏற்படுகின்றது! நாற்புறமும் ஏதிரிகளால் சூழப்பட்டுள்ள நமக்கு ஒற்றுமை தான் முக்கியம்! என்று போலி ஒற்றுமையைப் பேசி நன்மையை ஏவி தீமைகளை தடுக்க வேண்டும் என்ற இறைக் கட்டளையைக் காற்றில் பறக்கவிடுவர்!
இத்தகையவர்கள் மறுவுலக நம்பிக்கையைவிட இவ்வுலகின் மீது அதீத பற்றுக்கொண்டவர்கள்! அதனால் தான் மறுமையின் நற்பலன்களைவிட இவர்களுக்கு இவ்வுலகில் முஸ்லிம் பெயர் தாங்கிகள் படும் இன்னல்கள் மிகப் பெரியதாக தோன்றுகிறது! மறுமையை உறுதியாக நம்புபவர்கள் எதைப் பற்றியும் துளியும் அஞ்சமாட்டார்கள்!
அடுத்ததாக இன்னும் சிலர் இருக்கின்றனர்! அவர்கள் மார்க்கமறிய மண்டுகளாக இருப்பதோடல்லாமல் மகா கோழைகளாகவும் இருக்கின்றனர்! ஏகத்துவவாதிகள் ஏவுகனைகளைப் போல அடுக்கடுக்காக கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வக்கில்லாத இவர்கள் தங்களை நடுநிலையாளர்களைப் போல காட்டிக் கொண்டு அவ்வப்போது நடுநிலையான கருத்துக்களைப் பதிவதும் உண்டு! இத்தகைய நடுநிலைப் பதிவுகள் ஏகத்துவாதிகளுக்கு, நான் உங்களுக்கு எதிரியல்ல என்பதாக வெள்கைக்கொடி காட்டுவதற்காகத் தான்! ஆனால் இந்த நடுநிலைவாதிகளைப் பொருத்தவரையில் இறைவன் குறிப்பிடுகின்ற முனாஃபிக்குகளுக்கு முற்றிலும் பொருத்தமானவர்கள்!
இத்தகை நடுநிலைவாதிகள்உள்ளத்தில் ஏகத்துவவாதிகளுக்கு எதிராக கொடுர வஞ்சனையை வைத்துக் கொண்டு வெளியில் ஏகத்துவவாதிகளுடன் நட்புடன் இருப்பதைப் போல காட்டிக்கொள்வர்!
ஆனால் ஏகத்துவவாதிகளுக்கு எதிராக ஏதாவதொரு சந்தர்ப்பம் இவர்களுக்கு கிடைக்குமானால் பாலில் விசத்தைக் கலப்பது போன்று தங்களுக்கே உரித்தான வஞ்சப்புகழ்ச்சியின் வாயிலாக தங்களது மனிதில் இருக்கும் வஞ்சங்களையெல்லாம் கேள்விகளாக கொட்டித் தீர்ப்பர்! இவர்கள் தான் மகா கொடிய முனாஃபிக்குகள்!
மேற்கண்ட மூவகை நடுநிலை சொம்புகளுமே ஏகத்துவவாதிகளிடம் தங்களை நடுநிலையாக காட்டிக்கொண்டாலும் அவர்களை ஏகத்துவவாதிகள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை! காரணம் அவர்களின் சொல் வேறு! செயல் வேறாக இருப்பதே அவர்களை புடம் போட்டுக் காட்டிக் கொடுத்து விடுகிறது!
அதனால் தான் இந்த நசுங்கிய நடுநிலை சொம்புகளுக்கெதிரான கட்டுரைகளை ஏகத்துவவாதிகள் அவ்வப்போது வெளியிடுகின்றனர்! இவர்களைப் பொருத்தவரையில் ஏகத்துவவாதிகள் மற்றும் ஏகத்துவ எதிரிகள் இவர்களுக்கிடையே தட்டழைந்து திரிபவர்கள்!
ஆனால் மறுமையிலோ அல்லாஹ்விடமிருந்து பாரதூரமான தண்டனையைப் பெற இருக்கின்றனர்!
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்” (அல்-குர்ஆன் 4:145)
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
”வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்லுகிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டான்.” அறிவிப்பவர்: உமர் (ரழி): நூல்: ரஜீன்.
jazakallahu khairan, the article about nifaq is beautiful thank you,