ஹஜ், உம்ராவுக்கு வந்தவர்கள் தவாபுல் விதா செய்யவது கட்டாயமா?
ஹஜ் கடமையை செய்வதற்காக மக்கமா நகருக்கு வருவோர் கடைசியாக ஊர் திரும்புமுன் பயணத் தவாப் செய்வது கட்டாயமாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“(தவாபை) கடைசிக் கடமையாக செய்யும்படி நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் ஏவப்பட்டார்கள்; ஆனால் மாதவிடாய் உடைய பெண்களைத் தவிர” ஆதாரம் புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா வந்த சமயம் ஹஜ் முடிந்து மக்கள் எல்லாத் திசைகளிலும் சென்று கொண்டிருக்கும் போது,
“கடைசி உடண்படிக்கையாக தவாபை செய்யாத வரை யாரும் வெளியேற வேண்டாம்”
என நபியவர்கள் கூறினார்கள். ஆதாரம் முஸ்லிம், அஹ்மது
ஆனால் உம்ராவுக்கு வருபவர்களுக்கு நபியவர்கள் பயணத் தவாபை ஏவியதாக எந்த ஒரு செய்தியிலும் காணமுடியவில்லை.
மேலும் நபியவர்களும் உம்ரா முடித்துவிட்டு இறுதியாக தவாப் செய்து விட்டு சென்றாதாகக் கூட எந்த அறிவிப்பும் கிடையாது.
எனவே சுன்னத்தான தவாபை செய்து கொள்வதில் எந்தக் குற்றமும் கிடையாது. ‘கட்டாயம் செய்தாக வேண்டும்’ என்ற எந்த நிர்பந்ததமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆய்வு மற்றும் பத்வா நிரந்தர மையம்,
சவுதி அரேபியா. (11/336)
தமிழாக்கம் : மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,
அழைப்பாளர்,
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,
சவூதி அரேபியா