தவிர்க்க வேண்டிய சத்தியங்கள்
இஸ்லாத்திற்கு முரணான காரியங்களில் சத்தியம் செய்வது கூடாது.
பிறருக்கு உதவ மாட்டோம் என்று சத்தியம் செய்ய கூடாது:
அல்லாஹ் கூறுகின்றான்:
“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப்பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்யவேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கிருபையுள்ளவன்.” 2(அல்-குர்ஆன்4:22)
குடும்பத்தினருக்கு துன்புறுத்தும் வகையில் சத்தியம் செய்ய கூடாது:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, அவர் செய்யும் பெரும் பாவமாகும். (எனவே,) அவர் (சத்தியத்தை முறித்து) நன்மை செய்யட்டும்! – அதாவது பரிகாரம் செய்யட்டும்!” (புகாரி: 6626)