இறைவனிடம் துஆ செய்ய இறைநேசர்களிடம் வேண்டுவது இணைவைப்பா?
உயிருடன் இருக்கும் ஒருவர் மற்றொருவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுவதும் அவ்வாறே வேண்டப்பட்டவர் மற்றவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற ஒன்று! அல்லாஹ்வும் தனது திருமறையில் பெற்றோருக்காகவும் அற்ற முஃமீன்களுக்காகவும் பிரார்த்திப்பதை இதை கூறுகின்றான்!
ஒவ்வொரு நபிமார்களிடத்திலும் அவர்களின் உம்மத்துக்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யச் சொன்னதையும் அந்த நபிமார்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்ததையும் அல்லாஹ்வே தனது திருமறையில் கூறியிருக்கின்றான்!
ஆனால் இங்கு இவர்கள் குறிப்பிடுகின்ற ஆசி வழங்குதல் என்பது அந்த அர்த்தத்தில் கூறப்படப்படவில்லை! என்னை ஆசீர்வதியுங்கள் என்பதும் எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்பதும் வேறு வேறு! இரண்டும் ஒன்றல்ல!
முதலாவதில் யார் யாரிடம் ஆசி வழங்குமாறு வேண்டுகிறாரோ அவர் அவர் இறைத் தன்மைப் பொருந்தியவராகவும் அவர் ஆசிர்வதித்தால் நல்லவைகள் நடக்கும் என்ற நம்பிக்கையில் தம்மை ஆசிர்வதிக்குமாறு வேண்டுகின்றான்!
இரண்டாவதில் இறைவன் அனுமதித்திருக்கின்ற ஒன்றாதலால் ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்காக அவன் உயிருடன் இருக்கும் போது அல்லாஹ்விடம் பிரார்த்திக்க சொல்லலாம்!
இங்கும் ஒரு விசயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்! நாம் யாரிடம் நமக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோமோ அவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர் தாம் என்ற எண்ணத்திலே அவ்வாறு கூறவேண்டும்! மாறாக அவர் அல்லாஹ்விடம் நெருக்கமானவர் என்ற நம்பிக்கையில் அவரிடம் தம்மை ஆசிர்வதியுங்கள் என்றால் அது மாபெரும் ஷிர்க்காகிவிடும்.
யார் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்பது மறுமையில் தான் தெரியவருமேயல்லாது யாராலும் இவ்வுலகில் வைத்தே கண்டுபிடிக்க இயலாது!
அடுத்ததாக முக்கியமான விசயம் என்னவென்றால், உயிருடன் இருப்பவர்களிடம் தான் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு நாம் வேண்டலாமே தவிர மரணித்து மக்கி மண்ணாகிப் போன ஒருவரிடம் அவ்வாறு கேட்க இயலாது! அவ்வாறு கேட்பது தான் பகிரங்கமான இணைவைப்பாகின்றது!
தாம் அந்த மகானிடம் கேட்பது போலவே அதே நேரத்தில் இன்னும் பலர் அவரிடம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுவர்! இவ்வாறு வேண்டும் அவர் அந்த மகானுக்கு எத்தனை பேர்கள் எத்தனை தூரத்தில் இருந்து அழைத்தாலும் அவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் அறியும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இருப்பதைப் போல இந்த மகானுக்கும் இருக்கின்றது என்று நம்பித் தான் அவ்வாறு பிரார்த்திக்க கோருகின்றார்.
இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால் உயிருடன் இருக்கும் ஒருவரிடம் மற்றவர் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுவதும் இறந்தவரிடம் ஆசி வழங்குமாறு வேண்டுவதும் ஒன்றாகிவிடாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்!
Naam namadhu thebaigalai. Allaah (swt) vidam mattume. Ketka vendum.
Al hamdhu lillaah