ரத்த மோகிகள் – கவிதை

தவழும் பூக்களைக் காவு கொள்ளும்
கல்நெஞ்சர்களின் பொற்காலம்!?
“காஸா” சோலையில் தாண்டவப் புயலாடுகின்றன!

மலராத குழந்தை மொட்டுக்கள்
மட்டரக மனிதர்களால் பறிக்கப் படுகையில்
மீண்டும் துளிரத்தான் அஸ்தமக்கின்றனவோ!

ரத்த மோகிகளின் அடக்குமுறைகளில்
ரத்தக் களறிகள் நாளொரு மேனியாயும்
பொழுதொரு வண்ணமாய் ‘காஸா’வை நனைக்கின்றன!

அமெரிக்காவின் ஆசிர்வாதத்தில்
அரங்கேரும் அட்டூழியங்களுக்கு
அரங்கேற்றம் நடக்கும் காட்சிகள்தான் – இன்றைய செய்திகள

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

One thought on “ரத்த மோகிகள் – கவிதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed