இயற்கைத் தேவைகளை அடக்கிக் கொண்டு தொழலாமா?
தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டு விட்டது. ஆனால தொழுகைக்காக செல்லும் நேரத்தில் ஒருவர் கழிவறை செல்ல அவசியம் இருப்பதாக உணர்கிறார். இந்த நேரத்தில் அவர் என்ன செய்ய வேண்டும்? இகாமத் சொல்லப்பட்டு விட்டதால் மல, ஜலத்தை அடக்கிக் கொண்டு தொழுகைக்கு செல்வதா அல்லது முதலில் கழிவறைக்கு சென்று இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி விட்டு பிறகு தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
அல்லாஹ் தூய்மையானவன். மேலும் தூய்மையானவர்களை விரும்புகிறான். ஒருவர் தொழுகைக்கு செல்லும் நேரத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்ற தேவையிருந்தால் முதலில் அவர் கழிவறை சென்று அதை நிறைவேற்றி விட்டு பின்னர் உளூ செய்து தொழுகைக்காக செல்ல வேண்டும். அதன் மூலம் ஜமாஅத் தொழுகை தவறிவிடும் என்றிருந்தாலும் சரியே!
இப்னு அர்க்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தொழுகை ஆரம்பித்தவுடன் உங்களில் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க (கழிவறைக்கு செல்ல) தேவையிருந்தால் முதலில் அவர் சிறுநீர் கழித்து சுத்தம் செய்து கொள்ளட்டும்’
ஆதாரம் : அபூதாவுத்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.