கட்டாயத் திருமணம் இஸ்லாத்தில் இல்லை
அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:
“நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது;’ (அல்-குர்ஆன் 4:19.)
திருமணத்திற்கு முன் மணப்பெண்ணின் சம்மதம் பெறுவது அவசியம்!
கன்னி கழிந்த பெண்ணின் சம்மதத்தைத் திருமணத்தின்போது வாய் மொழியாகப் பெற வேண்டும்; கன்னிப் பெண்ணின் மௌனம் சம்மதமே.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறப்படாமல் மண முடித்துக்கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக்கொடுக்க வேண்டாம்”
என்று சொன்னார்கள். மக்கள்,
“அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண்ணின் அனுமதி(யை) எப்படி(ப் பெறுவது)? (அவள் வெட்கப்படக்கூடுமே?)”
என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“அவள் மௌனமாக இருப்பதே (அவளது சம்மதமாகும்)”
என்று கூறினார்கள். ஆதராம்: முஸ்லிம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்
“ஒரு கன்னிப் பெண்ணை அவளுடைய வீட்டார் மணமுடித்துக்கொடுக்கும் போது அவளிடம் அனுமதி பெற வேண்டுமா, இல்லையா?”
என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,
“ஆம்; அவளிடம் அனுமதி பெற வேண்டும்”
என்றார்கள். நான்,
“அவ்வாறாயின், அவள் வெட்கப்படுவாளே?”
என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“அவள் மௌனமாக இருந்தால், அதுவே அவளது சம்மதம்தான்”
என்றார்கள். ஆதராம்: முஸ்லிம்
கட்டாயத் திருமணம் செல்லுபடியாகாது!
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி) கூறினார்;
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள்.