ஈமானிய ஏக்கம் – கவிதை
ஈமானிய உள்ளங்களின் ஈரக்கனவுகள்
சாமானிய சங்கீதமாய் இசைக்கப்பட வேண்டாம்!
தேனாக இனிக்கும் காலம் தேடி
ஓயாப் பயணம் செல்லுதங்கே!
அஞ்சா நெஞ்சம் அறைந்த வேங்கையாய்
அஞ்ஞானம் அகற்ற புறப்பட்டதங்கே!
விஞ்ஞானம் பேசும் பேர்களுக்கெல்லாம்
மெஞ்ஞானமீந்து சொல்லுதங்கே!
மங்கா ஒளியுமிழும் விளக்குடனே
இருளகற்றி இறைமறை பயின்று
சங்காய் ஊதும் சத்தியத்தை
சாத்வீக சமூகத்திலே விதைத்தவாரல்லோ!
ஈமானிய உள்ளங்களின் ஈரக்கனவுகளை
இதமாய் புரிந்து ஈந்துதவும் மக்கள்தனை
இனிப்பாய் காணும் பொழுதுக்காய்
இமைக்கா கண்ணாய் கிடக்கிரோமய்யா!