அவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 10 : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவைகளை வலம் வருவது, அவர்களிடம் உதவி தேடுவது, பரக்கத்துக்காக அதைத் தொடுவது, அவைகளிடம் நேர்ச்சை செய்வது, அவைகளைக் கட்டுவது, அல்லாஹ்விடத்தில் வாங்கித் தரும் இடைத்தரகர்களாக அவர்களை நினைப்பது ஆகியவைப் பற்றிய இஸ்லாமீய தீர்ப்பு என்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவர்களிடம் உதவி தேடுவது, அவர்களிடம் நேர்ச்சை செய்வது, அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்களை இடைத்தரகர்களாக எண்ணுவது இந்த அனைத்து செயல்களும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து ஒருவரைவெளியேற்றுவதும் மற்றும் மரணத்திற்குப் பின் நிரந்தர நரகத்தைப் பெற்றுத்தரும் பெரும் ஷிர்க்காகும்.
கப்றுகளை வலம் வருவதும், அவைகளைக் கட்டுவதும் வழிகெட்ட பித்அத்தாகும். அவர்களது (மரணித்தவரது) திருப்தியை நாடி இவ்வாறு செய்வது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஷிர்கில் சேரும் செயல்களாகும். அக்கப்றுகளை சுற்றி வலம் வருவதன் மூலம் அவர்களது (மரணித்தவரது) திருப்தி, அவர்கள் அருள் புரிவார்கள், நமக்கு துன்பங்கள் வருவதை விட்டுத் தடுப்பார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. எனவே இது தடை செய்யப்பட்ட ஷிர்க்காகும்.