கிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்புகளில் பங்குப் பெற்று வாழ்த்துக் கூறலாமா?

மாற்று மத பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் கிரிஸ்மஸ் மற்றும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவும் வாழ்த்துக்களை பரிமாறவும் முடியுமா?

கடந்த 23-12-2018 சவூதி அரேபிய அர்-ரிஸாலா தொலைக்காட்சியில் ‘மார்க்க சட்டங்களை வினவுதல்’ என்ற நிகழ்சியில் கலந்து கொண்டு ஒரு தாய் கேட்ட கேள்விக்கு விடையளித்த சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்களின் சபை உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

ஒரு பிழையான வழிமுறையை அல்லது கொள்கையை ஆதரித்து அதற்கு வாழ்த்து தெரிவிப்பது எந்த வகையில் நியாயமாக முடியும்? எந்த வகையிலும் இதனை அனுமதிக்க முடியாது. நாம் குறித்த கொண்டாட்டங்களில் வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் அவற்றை அங்கீகரித்தவர்களாக ஆகிவிடுவோம்.

இவ்வாறு அந்நிய பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்கள் கட்டாயமாக இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு முரணான விழாக்களையும், வாழ்த்துக்களையும் தவிர்க்க வேண்டும். பாடசாலை நேரத்தில் மேற்குறித்த கொண்டாட்டங்கள் இடம் பெற்றால் கூட ஏதோ ஒரு வகையில் மலசலகூடத்திற்கு அல்லது வேறு தேவைகளுக்கு வெளியே செல்வதைப் போன்று வெளியே சென்றாவது இவற்றை தவிர்க்க வேண்டும்.

மாற்று மதத்தவர்கள் வாழ்த்து கூறும் போது கூட நாமும் பதிலுக்கு வாழ்து தெரிவித்து விடாமல் ‘அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்’ என்ற பிரார்த்தனைகள் மூலம் அவர்களுக்கு விடை அளிக்க வேண்டும். அவர்களுக்கும் நேர்வழி கிடைத்திட நாம் பிரார்த்திப்போம்.

தமிழில்: எம் றிஸ்கான் முஸ்தீன்
24-12-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed