மஸ்ஜிதுல் அக்ஸா வரலாறு
அன்பு சகோதர, சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
முஸ்லிம்களுக்கு மஸ்ஜிதுல் அக்ஸா எது என்று கூடத்தெரியாமல் இருப்பதற்காக யூத சூழ்ச்சிகளின் காரணமாக தொழுகை நடைபெறாத, மஸ்ஜித் அல்லாத, உள்ளே பாறைகள் நிறைந்த வேறொரு கட்டிடத்தை (குப்பத்துல் ஸஹ்ரா) மஸ்ஜிதுல் அக்ஸாவாக உலக மீடியாக்கள் உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவு குறைவாக இருக்கும், அதிலும் வாசிக்கும் பழக்கம் மிகமிகக் குறைவாக இருக்கும் நாமோ அந்தக் கட்டிடத்தையே மஸ்ஜிதுல் அக்ஸா என நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் யூதர்களின் நீண்ட சூழ்ச்சிகளின் காரணமாக படிப்படியாக மஸ்ஜிதுல் அக்ஸா எவ்வாறு நம்மையும் அறியாமல் நம்மைவிட்டு போய் கொண்டிருக்கிறது என்பதை மிக அற்புதமாக விளக்குகிறார் மௌலவி முஜிபுர் ரஹ்மான் உமரீ.
இவ்வுரையின் இறுதியில் மஸ்ஜதுல் அக்ஸாவின் (ஹரமின்) சுற்றுப்புற எல்லைச்சுவர், மஸ்ஜிதுல் அக்ஸாவாக உலகிற்கு காட்டப்பட்டு உலக முஸ்லிம்களும் இதுதான் மஸ்ஜிதுல் அக்ஸா என நம்பிக் கொண்ருக்கும் குப்பத்துல் ஸஹ்ரா, உண்மையான மஸ்ஜிதுல் அக்ஸா, நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்றபோது அவர்களுடைய வாகனம் கட்டப்பட்ட இடம் (தற்போது தங்களின் வணக்கஸ்தலமாக அந்த இடத்தை யூதர்கள் மாற்றியிருக்கிறார்கள்), மூஸா (அலை) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் பணிவுடன் நுழைந்த பாப் ஹித்தாஹ், சுலைமான் (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் இருக்குமிடம், முஸ்லிம்கள் வாழும் பகுதி மற்றும் யூதர்கள் வாழும் பகுதி போன்றவற்றை வரைபடம் மூலம் விளக்குகிறார் மௌலவி அவர்கள்.
முஸ்லிம் சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவரும் அவசியம் கேட்டுப் பயன்பெற வேண்டிய மிக அற்புதமான உரை. – நிர்வாகி.
மஸ்ஜிதுல் அக்ஸா வரலாறு:
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு
நாள் : 01-09-2010
இடம் : ரமலான் 2010 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்
நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத்
ஆடியோ : Download {MP3 format -Size : 15.1 MB}
வீடியோ : (Download) {FLV format – Size : 158 MB}