ஒரினப் புணர்ச்சி
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
‘மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்!’ எச்சரிக்கை! என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
ஒரினப் புணர்ச்சி
லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செய்து வந்த குற்றம் ஒன்று இருந்தது. அதுதான் ஆணும் ஆணும் புணர்வது.
அல்லாஹ் கூறுகிறான்:
“மேலும் நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்:
- ‘உங்களுக்கு முன்னால் உலக மக்கள் யாரும் செய்திராத மானக்கேடான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள்.
- (மோகம் கொண்டு) ஆண்களிடம் செல்கின்றீர்கள்,
- வழிப்பறி செய்கின்றீர்கள்,
- உங்கள் சபைகளில் வைத்தே தீய செயல்களில் ஈடுபடுகின்றீர்கள்’.
அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்,
- ‘நீர் உண்மையாளராயின் அல்லாஹ்வின் வேதனையை எங்களுக்குக் கொண்டுவாரும்’
என்பதாகவே இருந்தது” (29;28,29)
இந்த இழிவான படுமோசமான குற்றத்துக்காக அதைச் செய்தவர்களை அல்லாஹ் நான்கு வகையான தண்டனைகளைக் கொடுத்துத் தண்டித்தான். வேறெந்த சமூகத்தையும் அல்லாஹ் இப்படித் தண்டித்ததில்லை. அவை:
- அவர்களின் கண்களைக் குருடாக்கினான்.
- அவர்கள் வசித்த ஊரை தலைகீழாக புரட்டினான்.
- அவர்களின் மீது சுட்ட கற்களை தொடர்ந்து பொழியச் செய்தான்.
- அவர்கள் மீது பேரிடியை விழச் செய்தான்.
(முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த) இந்த ஷரீஅத்தின் சரியான கூற்றின்படி வாளால் வெட்டிக் கொல்வதே இக்குற்றத்தைச் செய்த இருவரின் தண்டனையாகும். அவ்விருவரும் சுய விருப்பத்தின்படி அதைச் செய்திருந்தால்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களை நீங்கள் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள்’
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்
இது போன்ற மானக்கேடான செயல்களால் நம் முன்னோர்களின் காலத்தில் இல்லாத உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் இன்றைய காலத்தில் பரவி வருவதைப் பார்க்கும் போது இக்குற்றத்துக்கு இத்தகைய தண்டனை விதித்திருப்பதில் இறைவனுடைய நுட்பம் நமக்குத் தெரிய வருகிறது.