தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபன்
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 14: தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபவனின் சட்டமென்ன?
எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் ஒரு நிறாகரிப்பாளனாகவே கருதப்படுவான். ஏனெனில் அவன் அல்லாஹ்வின் வார்த்தையை பொய்பித்தவன். அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவானவற்றை அறிய முடியாது, இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 27:55).
அல்லாஹ் தனது தூதரைப்பார்த்து அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்று மக்களைப் பார்த்துக் கூறுமாறு கட்டளையிடுகின்ற போது, எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் அல்லாஹ்வை பொய்பித்தவன் ஆகின்றான். அல்லாஹ்வின் தூதருக்கே மறைவானவற்றை அறிய முடியாது என்று குர்ஆன் கூறுகின்ற போது நீங்கள் எவ்வாறு உங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுவீர்கள்?
அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வின் தூதரைவிட சிறந்தவர்கள் எனக்கூற வருகின்றீர்களா? என்று அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரை விட மேலானவர்கள் என்பது அவர்களது பதிலாக இருக்குமானால் அவர்கள் இந்த வார்த்தையின் மூலம் நிறாகரிப்பை தேடிக் கொண்டவர்கள். அவர்களது பதில் இல்லை நம்மை விட அல்லாஹ்வின் தூதர் தான் மேலானவர் என்பதாக இருக்குமானால். நாம் அவர்களிடம் கேட்பது உங்களை விட மேலானவருக்கு கிடைக்காத மறைவான ஞானம் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது!!? அல்லாஹ் தனது திருமறையில் தன்னை பற்றி கூறுகின்ற போது:
‘(அவன் தான்) மறைவானவற்றை அறிந்தவன். எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்க மாட்டான். தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர – எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்’ (அல்குர்ஆன் 72: 26,27).
எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் தன்னை நிராகரிப்பாளனாக ஆக்குகின்ற இரண்டாவது ஆதாரம் இது. அல்லாஹ் தனது தூதருக்கு மக்களை பார்த்து இவ்வாறு கூறுமாறு கட்டளையிடுகின்றான்:
(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை, எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ (அல்குர்ஆன் 6: 50).
அஷ்ஷைக் ஸாலில் அல் உஸைமின் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து
தமிழ் வடிவம்: அஸ்ஹர் ஸீலானி.
இங்கு கூறப்படுகின்ற திருமறை வசனங்கள் எல்லாம் சரியானவையே. அதில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையில் ஞானம் உடையவன் தனக்கு மறைவான ஞானம் உண்டு என்று வாதிடமாட்டான். சூரத்துல் கஹ்பிலே களிர் அலை அவர்களை பற்றி கூறும்போது ‘நாம் அவருக்கு எங்களிடத்திலிருந்து ஞானத்தை கற்றுக்கொடுத்தோம்.’ என்று கூறுகிறான். அந்த லதுன்னிய்யத்தான இளமு என்றால் என்ன? அதைத்தொடர்ந்து ௦௩ சம்பவங்களையும் கூரிக்காட்டுகிறான் 1 திடீரென ஒரு கப்பலில் ஏறி துவாரமிட்டர்கள்.
2 வீதியில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையை துருவி கொலை செய்தார்கள். 3 தமக்கு உதவி செய்யாத ஒரு ஊரில் விழுவதட்கு தயாராக இருந்த சுவரை கஷ்டப்பட்டு நிமிர்த்தினார்கள். இம்மொன்று செயல்களையும் நபி மூசா அலை அவர்கள் ஏற்கவில்லை. பின் அதற்கான மறைவான தட்டுவங்களையும் கூறினார்கள்.
களிர் அலை அவர்களுக்கு இருந்த இந்த ஞானம் சுயமானதல்ல. ஆனால் இறைவனால் வழங்கப்பட்ட பரிசு.
ஆகவே யாரும் உண்மையான முஹ்மின்கள் தங்களுக்கு இறைவனுக்கு உள்ளதுபோல் மறைவான ஞானம் உண்டு என்று வாதிடுவதில்லை. மாறாக அது அவர்களுக்கு இறைவன் வழங்கும் பரிசே ஆகும்.
மிகவும் சரியான விளக்கம்.இத்தோடு தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபவனின் வார்த்தைகளை நம்பி மோசம் போகும் மக்களின் நிலைமையும் சட்டத்தையும் சேர்த்து விளக்கினால் படிப்பவர்களை அதிகம் சிந்திக்க வைக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.