பெண் கல்வியின் முக்கியத்தும்
பெண்கள் கல்வி குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“கல்வியைக் கற்பது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்”. அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக், ஆதாரம் சுனன் திர்மிதி, ஹதீஸ் எண் : 218
இஸ்லாமிய மார்க்கத்திலே கல்வியைப் பயில்வதிலே ஆண்களுக்கென்று ஒரு சட்டமும் பெண்களுக்கென்று ஒரு சட்டமும் இல்லை. ஆண் பெண் இரு பாலாரும் கல்வியைக் கற்க வேண்டியது கடமை என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
பல பேர் அடங்கியிருக்கக் கூடிய சபைகளில் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேள்விகள் பல கேட்டு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்த எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கின்றது. மேலும் இன்றளவும் நடைபெறும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளின் இறுதியில் நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் முஸ்லிமான பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம் அவர்களுடைய அறிவு தாகமும் தீர்த்து வைக்கப்படுகின்றது.