பெண்களின் வாரிசுரிமை

அல்-குர்ஆன் என்ன கூறுகிறது என பார்ப்போம்!

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்-குர்ஆன் 4:7)

மேலும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண்ணுடைய சொத்து அவளுக்கு மட்டுமே உரியது. அவளுடைய சொத்திலிருந்து கனவனையோ அல்லது அவனுடைய குழந்தைகளையோ பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மனைவியையும், அவனுடைய குழந்தைகளையும் காக்கும் முழு பொறுப்பும் கனவனையே சாரும். மேலும்  கனவனின் சொத்தில் அவளுக்கும், அந்த கனவன் மூலமாக பெற்றெடுத்த அவளுடைய குழந்தைகளுக்கும் உரிமையுள்ளது.

நடுநிலையான சகோதர, சகோதரிகள் பெண்களுக்கு வாரிசுரிமை அளிக்கும் மார்க்கம் எது என சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...