தொழுகையை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னரே தொழலாமா?
அல்லாஹ் கூறுகிறான்: –
‘நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ள’ (அல்-குர்ஆன் 4:103)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், ‘திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம் ‘என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார். (அல்-குர்ஆன் 2:45-46)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவவிக்கிறார்கள்: –
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்’ என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்’ என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
எனவே மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபிமொழிகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழ வேண்டும். விதிவிலக்காக நபி صلى الله عليه وسلم அவர்களின் வழிகாட்டுதல்களுக்கேற்ப பிராயணங்களிலும் கடும் காற்று, மழை போன்ற சூழ்நிலைகளின் போதும் ஒருவர் முற்படுத்தி தொழுவதற்கு அனுமதியுள்ளது. (பார்க்கவும் : ஜம்வு, கஸ்ரு தொழுகை)