இஸ்லாம் மார்க்கம் Vs வஹ்தத்துல் உஜூத் மதம் – என்ன வித்தியாசம்?
இஸ்லாம் மார்க்கம்:
- வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை!
- முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள்
வஹ்தத்துல் உஜூத் மதம்:
இதன் வழிகேடான கொள்கைகளில் சில..
- அல்லாஹ் எல்லா பொருள்களிலும் இருப்பதால் “எல்லாமே அல்லாஹ்” தான்!
- அதனால் தான் மாற்றுமதத்தவர்கள் வழிபடும் சிலைகளிலும் அல்லாஹ் இருபபதாக நம்பிய இக்கொள்கையின் தலைவன் இப்னு அரபி, “காளைக் கன்றை வணங்கிய மூசா (அலை) அவர்களின் உம்மத்துக்கள் அல்லாஹ்வையே வணங்கியதாக” கூறினார்.
- அல்லாஹ் தான் புத்தனாக, இயேசுவாக வந்தான்!
- அல்லாஹ் தான் முஹம்மது நபியாக அவதாரமெடுத்து இப்பூலகில் அவதரித்தான்!
நவூதுபில்லாஹ் – இவர்களின் கூற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
- அல்லாஹ் வேறு! அவனது படைப்பினங்கள் வேறு!
- அல்லாஹ் வேறு! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வேறு!
“அல்லாஹ் தான் முஹம்மது (ஸல்)” என்பவர்கள் வழிக்கேட்டில் உழன்றுக் கொண்டிருக்கின்றனர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து படைப்பினங்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ்வே!
அல்லாஹ் கூறுகின்றான்:
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அல்குர்ஆன் 1:2.)
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். (அல்குர்ஆன் 3:144)
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள். (அல்குர்ஆன் 39:30)
படைப்புகளை படைத்தவனோடு ஒன்றாக்குகின்ற, மேலும் முஹம்மது (அலை) அவர்களை அல்லாஹ்வின் அவதாரமாக சித்தரிக்கும் சூஃபியிஸ, வஹ்தத்துல் உஜூத் வழிகேட்டு கொள்கைகளிலிருந்து முஸ்லிம்கள் விலகி இருந்து தங்களின் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.