கஞ்ஜூல் அர்ஸ் என்ற துஆ இருக்கிறதா?
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
சூபிகள் தங்களை பின்பற்றக் கூடிய முரீதுகளுக்காக, அல்-அவ்ராத் என்ற பெயரில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விதத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் ஓதக்கூடிய இட்டுக்கட்டப்பட்ட ஒரு பாடல் தான் கஞ்ஜூல் அர்ஸ் என்ற துஆ.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இதுபோன்ற துஆக்கள் இல்லையென்பது மட்டுமல்ல, இவர்களை பின்பற்றுவதும் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் “துஆ என்பது ஒரு வணக்கமாகும்”.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள்,
திக்ருகளும் துஆக்களும் மிகசிறந்த வணக்கமாகும்
என்று கூறியுள்ளார்கள்.
வணக்க வழிபாடுகள் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையில் இருக்க வேண்டுமே தவிர ஒருவரின் ஆசை அபிலாசையாகவோ அல்லது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகவோ இருக்கக் கூடாது.
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத எந்த ஒரு வணக்க வழிபாடுகளும், அவை திக்ருகளாகவோ அல்லது துஆக்களாகவோ இருந்தாலும் சரியே! அவைகளை மக்களுக்கு கற்றுத் தருவது மற்றும் பின்பற்றுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இதைத் தான் மார்க்கத்த்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு எசசரித்துள்ளார்கள்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்த திக்ருகளும் துஆக்களுமே நாம் வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கும் நம்முடைய இலக்கை அடைவதற்கும் சிறந்ததாகவும், போதுமானதாகவும் இருக்கிறது.
அறிவீனர்களும், தவறு செய்பவர்களைத் தவிர வேறு யாரும் அல்லாஹ்வும் அவனது தூதருடைய வழியை புறக்கணித்து, மார்க்கத்த்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வழியை பின்பற்றமாட்டார்கள்.
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
Nice Massage for this season..Jazakallah khair Anver Bhai
who is ibnu thaimiyya? why do you give important to his idea, dua of kanzul arsh is not in our prophet’s way OK .
அன்பு சகோதரரே!
ஒரு முஃமினின் பாதை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை ஒத்திருக்கவேண்டுமென்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை! அதற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய அறிஞர் கூறினாலும் அவற்றை நாம் பொருட்படுத்த தேவையில்லை!
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களும் குர்ஆன் சுன்னாவைப் பின்பற்ற வேண்டும் வேண்டும் என்பதற்காக தன் வாழ்வையே அர்பனித்து தியாகங்கள் பல செய்தவர். சூஃபியிஸத்தையும், பித்அத்களையும் ஒழிக்க அரும்பாடுபட்டவர். அவருடைய கருத்தை அது குர்ஆன் ஹதீஸிற்கு உட்பட்டிருப்பதால் தான் பதிகின்றோம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.