மாற்று மதத்தவர்களை காஃபீர் என்று அழைத்து அவமதிப்பது ஏன்?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி எண்: 15

‘காஃபீர்’ என்று அழைத்து மாற்று மதத்தவர்களை, முஸ்லிம்கள் அவமதிப்பது ஏன்?

பதில்:

‘காஃபீர்’ என்றால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்று பொருள்:

‘காஃபீர்’ என்கிற அரபு வார்த்தை ‘குஃப்ர்’ என்கிற அரபு மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘குஃப்ர்’ என்கிற அரபு வார்த்தைக்கு ‘நிராகரித்தல்’ அல்லது ‘உண்மையை மறைத்தல்’ என்று பொருள். இஸ்லாமிய கலைச்சொல் களஞ்சியத்தின்படி மேற்படி வார்த்தைக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் அல்லது இஸ்லாம் பற்றிய உண்மைகளை மறைப்பவர் என்று பொருள் உண்டு. அதனை தமிழ் மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்று பொருள் கொள்ளலாம்.

மாற்று மதத்தவர்களே! – ‘காஃபீர்’ என்ற சொல் உங்களை புண்படுத்துவதாக கருதினால், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

மாற்று மதத்தவர்களே! ‘காஃபீர்’ என்ற நீங்கள் அழைக்கப்படுவது உங்களை புண்படுத்துவதாக கருதினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை எவரும் ‘காஃபீர்’ (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்) என்று அழைக்க மாட்டார்கள்.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *