பிற மதத்தவர்களின் பெருநாள் நிகழ்ச்சிகளில் பங்குபெறுதல்
முஸ்லிம் அல்லாதவர்களின் விழாக்களில் பங்குபெறுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள்.
“யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத்
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:
“யார் மாற்று மதத்தவர்கள் வாழும் ஒரு பூமியில் வாழ்ந்து அவர்களின் விழாக்கள், நிகழ்வுகளில் கலந்துக்கொண்டால் மரணிக்கும் வரை அந்த கூட்டத்திற்கு ஒப்பாகி நாளை மறுமையில் நஷ்டமடைவார்”
இந்த மாதிரியான விழாக்களில் பங்குபெறுவது, அவர்களை உற்ற நேசர்களாக எடுத்துக் கொள்ளும் பாவத்தை சம்பதிக்க வேண்டிவரும்!
“முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்” (அல்-குர்ஆன் 5:51)
“ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்” (அல்-குர்ஆன் 60:01)
பெருநாள் விழாக்கள் என்பது, ‘அவர்களது சமயம் சார்ந்த விடயம்!’ அது ஒரு சாதாரன வழமையோ, உலக காரியமோ அல்ல!
காரணம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமது பெருநாள்” என்றார்கள்.
எனவே, அவர்களது பெருநாள் என்பது, ‘அவர்களது இறை நிராகரிப்பு மற்றும் இணைவைப்பபை பிரதிபளிக்கக் கூடியதாக இருக்கும்.’
“அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்” (அல்-குர்ஆன் 25:72)
இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் உலமாக்கள் அன்னிய மதத்தவர்களின் பெருநாள் விழாக்களை குறிக்கின்றது என்கின்றனர்.
மேலும், இந்த பெருநாள்களில் வாழ்த்து அட்டைகளை பகிர்வது, அவற்றை விற்பனை செய்வது, மேலும் அவர்களது பெருநாள் தினங்களில் அவர்களது வீடுகளை அலங்கரிக்கும் மின் விளக்குகளை காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது, கிறிஸ்துமஸ் மரங்கள், பலூன்கள், ஏனைய அவர்களது உணவு பண்டங்களை பரிமாறுவது, விற்பனை செய்வது போன்ற என எல்லா வகையான செயற்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டிய, தடை செய்யப்பட்ட விடயங்களாகும்!