கப்று வணக்கம் புரிந்தவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 07 : ஸுன்னாவை பின்பற்றி வாழும் ஒருவர் வழிதவறிச் சென்ற (ஹுராபிகளின்) இறுதிச் சடங்குகளில் கலந்து அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்ற முடியுமா?
பதில் : பெரும் பாவமான ஷிர்க்கை செய்தவர்கள், உதாரணத்திற்கு, மரித்தோரிடம் உதவி தேடுவது, அவர்களிடம் பிரார்த்திப்பது, வானவர்களிடம், ஜின்களிடம், வேறு படைப்புக்களிடம், உதவி தேடுவது, பிரார்த்திப்பது தெளிவான ஷிர்க்காகும். அவர்களது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வது, அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்றுவதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஷிர்க் அல்லாத வழிகெட்ட பித்அத்துக்களை செய்பவர்கள், உதாரணத்திற்கு, ஷிர்க் இல்லாத மவ்லூத் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், மிஃராஜ் இரவை கொண்டாடுபவர்கள் இவர்கள் செய்வது பாவமே. எனினும் இவர்களது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியும், அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்ற முடியும். அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத இந்தப் பாவிகளுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘
நிச்சயமாக அல்லாஹ் ஷிர்க் அல்லாத ஏனைய பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்’ (4: 116).