கப்றுகளுடன் இருக்கும் மஸ்ஜிதுகளில் தொழலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 12 : நல்லடியார்களின் கப்றுகளின் மீது மஸ்ஜித்கள் கட்டுவது,; அம் மஸ்ஜித்களில் தொழுவது. இதைபற்றிய இஸ்லாமீய சட்டமென்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளின் மீதோ அதன் அருகிலோ மஸ்ஜித்கள் அமைப்பது முழுமையாக தடுக்கப்பட்டதாகும். அவ்வாறான மஸ்ஜித்களில் தொழுவதும் கூடாது.
‘நபிமார்களின் கப்றுகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘அறிந்து கொள்ளுங்கள் இதற்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் நபிமார்களின், நல்லடியார்களின் கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டனர், கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிவிடாதீர்கள் அதை நான் உங்களுக்கு முழுமையாக தடை செய்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
“நபி (ஸல்) அவர்கள் கப்றுகள் பூசப்படுவதை, அவைகள் மீது அமருவதை, அவைகள் கட்டப்படுவதை தடை செய்தார்கள்” என கூறினார்கள்.
தர்காகளாக இயங்கி வந்த இடங்களை பள்ளிகலாக்கலாமா?மேற்கத்திய நாடுகளில் இயங்கி வந்த கிறிஸ்தவர்களின் ஆலயங்கள் இன்று மஜ்ஜிதுகளாக இன்று மாறி இருக்கிறது தானே?