தொழுகைக்கான மற்றும் தொழுவதற்கு தடைசெய்யப்பட்ட நேரங்கள்
ஒவ்வொரு தொழுகையையும் குறிப்பிடப்பட்ட அதனதன் நேரத்தில் தொழ வேண்டும்: –
அல்லாஹ் கூறுகிறான்: –
‘நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது’ (அல்-குர்ஆன் 4:103)
ஐங்காலத் தொழுகையின் நேரங்கள்: –
ஃபஜ்ர் : அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்.
லுஹர் : சூரியன் உச்சி சாயத்துவுங்கியதிலிருந்து ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவிற்கு வரும் வரைக்குமாகும்.
அஸர் : ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவை அடைந்தவுடன் ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது.
மஃரிப் : சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரைக்குமாகும். செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றுவதாகும்.
இஷா : செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின் பகுதி வரைக்குமாகும்.
ஸஜ்தா செய்வதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள்: –
1) சூரியன் அடிவானில் உதயமாவதில் இருந்து அது முழுமையாக உதயமாகும் வரை உள்ள நேரங்கள்.
2) சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது.
3) சூரியன் அடிவானில் மறைய ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக மறையும் வரை உள்ள நேரம். (ஆதாரம் : அஹ்மத் மற்றும் முஸ்லிம்)
மேற்கண்ட மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னுடைய இறைவனுக்காக ஸஜ்தா செய்வதற்கு எந்த தடையும் இல்லை.