தடைசெய்யப்பட்ட வார்த்தைகளைக் கூறுவது
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! எச்சரிக்கை!
என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
பல ஹராமான, ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன. சில முஸ்லிம்கள் அவற்றைக் கூறி வருகின்றனர்.
உதாரணமாக,
- அல்லாஹ்வைக் கொண்டும், உன்னைக் கொண்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்,
- அல்லாஹ்வின் மீது உன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன்,
- இது அல்லாஹ்வினாலும் உன்னாலும் தான் கிடைத்தது,
- அல்லாஹ்வையும் உன்னையும் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார்,
- எனக்காக வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீயும் இருக்கிறாய்,
- அல்லாஹ்வும் இன்னாரும் இல்லையென்றால் இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,
- காலத்தின் கோலமே!
இன்னும் இதுபோன்ற காலத்தைத் திட்டும்படியான வாசகங்கள்.
உதாரணமாக,
- கெட்டகாலம்,
- நேரம் கெட்ட நேரம்,
- காலத்தின் சூழ்ச்சி
போன்ற வாசகங்கள்.
ஏனெனில், ‘காலத்தைத் திட்டுவது அதனை படைத்த இறைவனைத் திட்டுவது’ போலாகும் –
-
- இயற்கையின் நாட்டம்,
- படைப்பினங்களின் பெயருடன் ‘அப்து’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறப்பட்ட பெயர்கள் –
- உதாரணமாக,
- அப்துல் மஸீஹ்,
- அப்துன் நபி,
- அப்துர் ரஸூல்,
- அப்துல் ஹுஸைன்
- உதாரணமாக,
அப்து என்பதன் பொருள் அடிமை ஆகும். அப்து என்பதை அல்லாஹ்வின் பெயர்களுடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.
இதுபோல, தவ்ஹீதுக்கு எதிரான நவீன சில வாசகங்களும், சொல் வழக்குகளும் உள்ளன.
- இஸ்லாமிய சோஸலிஸம்,
- இஸ்லாமிய ஜனநாயகம்,
- மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு,
- மதம் இறைவனுக்குரியது நாடு மக்களுக்கு உரியது,
- மொழி, இனவாதம்,
- புரட்சி வாதம்
மலிகுல் முலூக் (அரசர்களுக்கெல்லாம் அரசர்),
காழியுல் குழாத் (நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி)
என்ற வார்த்தைகளையும் இந்த அர்த்தத்திலுள்ள வார்த்தைகளையும் ஒரு மனிதருக்குச் சொல்வதும்,
அதுபோல,
ஸய்யித் (தலைவர், எஜமான்) என்ற வார்த்தையையும் அதே அர்த்தத்திலுள்ள வேறு வார்த்தைகளையும் – அது எந்த மொழியிலிருந்தாலும் சரி நயவஞ்சகனுக்கும் காஃபிருக்கும் சொல்வதும்,
- இப்படியாகி விட்டதே!
- அப்படியாகி விட்டதே!
- இப்படி இருந்திருக்கக் கூடாதா!
- அப்படி இருந்திருக்கக் கூடாதா!
- இவ்வாறு இருந்திருந்தால்,
- அப்படி இருந்திருந்தால்,
- இப்படி நடந்திருந்தால்,
- அப்படி நடந்திருந்தால்
என்பன போன்ற அதிருப்தி, வருத்தம், கை சேதம் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய – ஷைத்தானிய செயலுக்கு வழி திறந்து விடக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதும்,
இறைவா! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! என்று கூறுவதும் விலக்கப்பட்டவையாகும்.