மார்க்க கேள்வி பதில்கள்: அகீதா மற்றும் ஃபிக்ஹ் சம்பந்தமான மார்க்க சந்தேகங்களுக்கு பின்வரும் சுட்டியை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். (குறிப்பு: தயவுசெய்து மார்க்க அறிவுப் போட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளை இங்கு கேட்க வேண்டாம்)
LINK: மார்க்க சந்தேகங்களை பதிவு செய்ய…
நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்
A) அகீதா தொடர்பான கேள்வி பதில்கள்:
‘கேள்வி பதில்கள்-இஸ்லாம்’ பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-தவ்ஹீது’, ஏகத்துவம் பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-ஈமான்’ – இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-முஹம்மது நபி’ (ஸல்) பற்றியவைகள்:
B) ஷிர்க்-இணைவைப்பு தொர்பான கேள்வி பதில்கள்:
‘கேள்வி பதில்கள்-ஷிர்க்’, இணைவைப்பு பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-கப்று வழிபாடுகள்’, நபிமார்கள், இறை நேசர்கள், அவுலியாக்களிடம் பிரார்த்திப்பது, உதவி தேடுவது பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-கப்று ஜியாரத்’, கப்றுகளைத் தரிசிப்பதற்காகப் பயணம் மேற்கொள்வது சம்பந்தமானவைகள்:
‘கேள்வி பதில்கள்-வஸீலா தேடுதல்’, ஷஃபாஅத் – பரிந்துரை வேண்டுதல் சம்பந்தமானவைகள்:
‘கேள்வி பதில்கள்-மறைவான ஞானம்’ பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-நேர்ச்சை செய்தல்’ குறித்தவைகள்:
‘கேள்வி பதில்கள்-மௌலூது’, யாகுத்பா, புகழ் மாலைகள் படிப்பது சம்பந்தமாக:
‘கேள்வி பதில்கள்-மறைமுக ஷிர்க்’, சிறிய இணை வைப்பு, முகஸ்துதி சம்பந்தமானவைகள்:
‘கேள்வி பதில்கள்-ஜோதிடம்’, சாஸ்திரம், மூட நம்பிக்கைகள் சம்பந்தமானவைகள்:
‘கேள்வி பதில்கள்-தாயத்து’, சாஸ்திரம், மாந்திரீகம் சம்பந்தமானவைகள்:
‘கேள்வி பதில்கள்-சத்தியம் செய்தல்’ பற்றிய விளக்கங்கள்:
‘கேள்வி பதில்கள்-பிறமத விழாக்கள்’, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது மற்றும் அவைகளில் கலந்து கொள்வது தொடர்பானவை:
‘கேள்வி பதில்கள்-வழிகேடான பிரிவுகள்’ பற்றிய விளக்கங்கள்:
C) பித்அத் தொடர்பான கேள்வி பதில்கள்:
‘கேள்வி பதில்கள்-பித்அத்’ சம்பந்தமானவை:
‘கேள்வி பதில்கள்-மரண சடங்குகள்’ சம்பந்தமானவை:
D) அல்-குர்ஆன் தொடர்பான கேள்வி பதில்கள்:
‘கேள்வி பதில்கள்-குர்ஆன் விளக்கம்’ சம்பந்தமானவைகள்:
E) ஃபிக்ஹ் தொடர்பான கேள்வி பதில்கள்:
‘கேள்வி பதில்கள்-இபாதத்’ பற்றிய விளக்கங்கள்:
‘கேள்வி பதில்கள்-தூய்மை’, உளூ, தயம்மும் செய்தல் பற்றிய விளக்கங்கள்:
‘கேள்வி பதில்கள்-தொழுகை’ பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-ஜக்காத்’ பற்றியவைகள்:
‘கேள்வி பதில்கள்-பெண்கள்’ சம்பந்தமானவைகள்:
‘கேள்வி பதில்கள்-விலக்கப்பட்ட உணவுகள்’ சம்பந்தமானவைகள்:
‘கேள்வி பதில்கள்-மருத்துவம்’ சம்பந்தமானவைகள்:
F) அஹ்லாக் பற்றிய கேள்வி பதில்கள்:
‘கேள்வி பதில்கள்-நற்குணங்கள்’ சம்பந்தமானவைகள்:
எங்கள் மஸ்ஜித் ஹனஃபி – சுன்னத் வல் ஜமாத் முறை பின்பற்றும் மஸ்ஜித் ஆகும்.எங்கள் மஸ்ஜிதின் இமாம் சாஹெப் இமாமத் செய்யும் போது தலையில் துணி தொப்பியுடனும்,வெள்ளிகிழமை குதபா ஓதும் போது அசாவை பிடிப்பதில்லை.இதனை குறித்து மார்க்க தீர்ப்பு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்
ஜும்ஆ குத்பாவின் போது அசாவை ஏந்தும் நடைமுறையில் உலமாக்களுக்கு மத்தியில் இரு கருத்து நிலவுகினறது. ஹனபி மத்ஹப் தவிர்ந்த ஏனைய மத்ஹப்களை சார்ந்த உலமாக்கள் அசா ஏந்துவதை ஒரு சிறந்த நடைமுறையாக கருதுகின்றனர். நபியவர்களின் வழிமுறை (சுன்னா) என்று சொல்லவில்லை. ஆனால் ஹனபி மத்ஹபின் கருத்து பிரகாரம் இந்நடைமுறை வெறுக்கத்தக்கது என்கின்றனர். இதில் பிற்கால உலமாக்களின் கருத்தை பார்க்கும் போது இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்) போன்றோர் இமாமுக்கு தேவை ஏற்படும் இடத்து அசாவை உபயோகிக்கலாம். தேவை இல்லாத போது அதை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்கின்றார். ஷரஹுல் மும்திஃ (5-62) எனவே இது விடயத்தில் மிகப் பெரிய வாதப்பிரதிவாதங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அல்லாஹு அஃலம்.
jumma tholugaiyae vida nerital, jumma tholugaiye thaniyaga tholalama, kooduma?
ஜுமுஆ தொழுகையை மார்க்க ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு காரணத்திற்காக விட வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அவர் ளுஹர் தொழுகை நான்கு ரக்கஅத்துக்களையும் தொழ வேண்டும். ஆனால் யார் வேண்டும் என்றே ஜுமுஆவை விட்டு விடுகின்றாரோ அவர் அல்லாஹ்விடம் அதற்காக பாவமன்னிப்பு கோரி விட்டு ளுஹர் நான்கு ரக்அத்துக்களை தொழ வேண்டும். இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் மார்க்க தீர்ப்புக்களில் இருந்து (12-332)
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) கணவன் மனைவிக்கு ஒரு பெண் குழ்ந்தை இருக்கும் பட்ச்சத்தில் இருவரும் தலாக் பெற்று பிரியும் நிலையில் அந்த பெண் குழ்ந்தை யாருக்கு சொந்தம் என மார்க்கம் சொல்வது…?
வஅலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்,
ஏழு வயது வரைக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயின் வளர்ப்பில் இருக்க வேண்டும். தந்தை அதற்குறிய செலவுகளை வழங்க வேண்டும். ஆனால் ஏழு வயதை தாண்டியதும் அந்த பிள்ளை யாரோடு வாழ வேண்டும் என்று விரும்புகின்றதோ அதன் பிரகாரம் தாயுடன் அல்லது தந்தையுடன் இருக்கலாம். இந்த விடயத்தில் இஸ்லாமிய நீதிமன்றத்தை நாடுவதே சிறந்தது. இமாம் இப்னு உஸைமின் (ரஹ்) அவர்களின் ஷரஹுல் மும்திஃ (13-535)
குலாக்’கொடுப்பதற்க்கு உண்டான சட்டத்தை விவரிக்கவும்
அஸபாத் என்பவர் யார்
உளு அல் அசம் என்றால் என்ன?
அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத அல் குர்ஆனிலே முத்தஸாபிகளான ஆயத் எத்தனை , எந்தெந்த ஜிஸ்வில் வருகிறது ?