வாசகர்களின் கேள்விகள்

வாசகர்களின் கேள்விகள்: உங்களுக்கு ஏற்படும் பிக்ஹ், ஹதீஸ்கள் மற்றும் அகீதா சம்பந்தமான பின்வரும் சுட்டியை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்!

இறைவன் நாடினால் பதிலளிக்க முயற்சிக்கின்றோம்.

மார்க்கத்தில் பிக்ஹ், ஹதீஸ்கள் மற்றும் அகீதா சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள்! தயவுசெய்து மார்க்க அறிவுப்போட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளை இங்கு கேட்க வேண்டாம்.

LINK: மார்க்க சந்தேகங்களை பதிவு செய்ய…

நிர்வாகி,
சுவனத்தென்றல்.காம்

வாகசர்களின் கேள்விளும் அவற்றுக்கான விளக்கங்களும்:
மற்றவர்களுக்கு அனுப்ப...
10 thoughts on “வாசகர்களின் கேள்விகள்”
  1. அல் குர்ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபித்தோழர் யார்?

  2. என்னுடைய பெயர் ரமேஷ் நான் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி எட்டு ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இதுவரை நான் முஸ்லீம் பெயர் வைத்துக்கொள்ளவில்லை கட்டாயமாக பெயர் மாற்றிக்கொள்ள வேண்டுமா அப்படி என்றல் அதற்கான விளக்கம் தரமுடியுமா

    1. அல்லாஹ் உங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும்..
      பெயர் மாற்றம் செய்வதை பொறுத்தமட்டில் முஸ்லிம் அல்லாதவர்களின் கடவுள்களின் பெயராகவோ அல்லது மோசமான அர்த்தத்தை உடைய பெயராக இல்லா விட்டால் பெயரை மாற்ற வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இஸ்லாத்தில் கிடையாது..

      1. என்னுடைய வினாக்களுக்கு அருமையக விடை அளித்தீர்கள் , மிக்க நன்றி , மேலும் நான் பெயர் மற்றம் செய்யாமல் என்னால் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய இயலுமா , நான் இந்த உலகத்தில் இருந்து விடை பெரும்போது இஸ்லாமிய பெருமக்களால் தொழுகை செய்து கபிருவில் அடக்கம் செய்ய முடியுமா , இதை நான் ஏன் உங்களிடம் கேட்க்கிறேன் என்றால் , சில இஸ்லாமிய மக்கள் ஹராமான காரியங்களை செய்துவிட்டு பெயரளவில் முசிலீமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு அல்லாஹ் கபிருவில் இடம் அளிக்கும்போது இஸ்லாம் பற்றி அறிந்து அதனை பின்பற்றிவரும் எனக்கு அல்லாஹ் அந்த பாக்கியத்தை அளிப்பானா

        1. ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக பெயர் மாற்றம் செய்வது கட்டாயம் இல்லை..
          கபரில் இடம் தருவானா என்பதை விட முற்றிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் அடியார்களுக்கு சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களை தருவான் என்பது நிச்சயம்..
          புதிய முஸ்லிம் பழைய முஸ்லிம் என்ற வேறுபாடு அல்லாஹ்விடத்தில் கிடையாது..

  3. என்னுடைய பெயர் ரமேஷ் நான் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி எட்டு ஆண்டுகள் ஆகின்றது என்னுடைய தாய் அல்லது என்னுடைய தந்தை மரணித்துவிட்டால் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாமா அப்படி செய்யக்கூடாது என்று அல்லாஹ் அல்லது குரான் எந்த இடத்திலாவது சொல்கின்றதா தயவு செய்து விளக்கம் அளிக்கவும்

    1. தாய் தந்தை முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய கடமைகளை செய்யுமாறு இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டுகிறது.
      அவர்களின் மரணச் சடங்கிற்கு தாராளமாக போகலாம்..
      இணைவைப்பை ஏற்படுத்தக்கூடிய காரியங்களை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்..
      அல்லாஹ் மிக அறிந்தவன்..

  4. ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக பெயர் மாற்றம் செய்வது கட்டாயம் இல்லை..
    கபரில் இடம் தருவானா என்பதை விட முற்றிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் அடியார்களுக்கு சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களை தருவான் என்பது நிச்சயம்..
    புதிய முஸ்லிம் பழைய முஸ்லிம் என்ற வேறுபாடு அல்லாஹ்விடத்தில் கிடையாது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *