ரபியுல் அவ்வல் மாதத்தை பிறருக்கு அறிவித்தால் நரகம் ஹராமாக்கப்படுமா?

சில மக்கள் ரபியுல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் அதனை பிறருக்கு அறிவிப்பதன் மூலம் நரகம் ஹராமாக்கப்படுவதாக நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக ஒரு “ஹதீஸை” மேற்கோள் காட்டுகின்றனர்.

“யார் இந்த கண்ணியமான மாதத்தை (ரபியுல் அவ்வல்) நன்மாராயமாக கூறுகின்றாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்படும்”

இந்த செய்தி ஆதாரபூர்வமானதா?

இந்த செய்தியை எந்த ஒரு ஹதீஸ் கிரந்தத்திலும் காண முடியவில்லை! இதனை நபியவர்களோடு இணைத்து ஹதீஸாக கூறுவது மிகப் பெரும் அவதூறாகும்.

காரணம் நபியவர்கள் மீது பொய் உரைப்பது பெரும் பாவமாகும். நபியவர்கள் நவின்றார்கள்:

“யார் என்னைப் பற்றி ஒரு செய்தியை அறிவித்து அது பொய்யாகக் கருதிதப்பட்டால் (அதை அறிவித்தவர்) பொய்யர்களில் நின்றும் உள்ளவராவார்” ஆதாரம் முஸ்லிம் (1-7)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளிக்கும் போது,

“யாருக்கு தான் அறிவிக்கும் செய்தி பொய் என்று தெரிந்தும் (ஆய்வு செய்யாமல்) அதனை அறிவிக்கின்றார் என்றால் அவர் பொய்யர் என்பதில் சந்தேகம் கிடையாது”

என்கிறார்கள்.

எனவே இந்த மாதிரியான செய்திகளை அப்படியே நாமும் பிறருக்கு பகிர்ந்து நபியவர்கள் மீது பொய் உரைத்து பொய்யனாக மாறிவிடாமல் நம்மையும் நமது ஈமானனையும் பாதுகாத்துக் கொள்வோமாக!

மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,
அழைப்பாளர்,
அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,
அல்-கப்ஜி,
சவூதி அரேபியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed