அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யலாமா?
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
மார்க்கத் தீர்ப்புக்கள் – கேள்வி 02 : அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதற்கு அனுமதி இருக்கிறதா?
பதில் : அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது.
‘அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ் உங்கள் பெற்றோர்கள் மீது சத்தியம் செய்வதை தடை செய்கிறான். உங்களில் ஒருவர் சத்தியம்செய்வாராக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில்,
‘உங்கள் பெற்றோர்கள் மீது சத்தியமிடவேண்டாம். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதேயன்றி சத்தியமிடவேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், நஸாஈ).
‘எவன் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்வாரோ அவன் நிராகறித்துவிட்டான், அல்லது ஷிர்க் எனும் பெரும் பாவத்தை செய்து விட்டான்’ (அபூதாவுத், திர்மிதி).