சோஃபி ஜென்கின்ஸ் ன் இஸ்லாத்தை நோக்கிய பயணம்

நான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடும்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில்  இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.

சிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.

நீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, பெரியவர்கள் சொல்வதை, செய்வதை எல்லாம் எவ்வித தவறும் இல்லாமல் சரியானதவைகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். இப்போது கூட அப்படித் தான் நினைக்கத் தோன்றும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவேகமாக ‘ஒரு கடவுள் தான் இருக்கிறார்’ என்று தீர்மானித்து தனிப்பட்ட முறையில் நம்பி வந்தேன். அதற்கு முன்னர் தவறானவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக வருத்தப்பட்டேன். கிறிஸ்தமத கோட்பாடுகளுக்கு மாற்றாமான நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இருக்க வெட்கப்பட்டு அதிலிருந்து விடுபட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்து வந்தேன்.

நான் சிறுமியாக இருந்தபோது “இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்”. பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என்னுடைய ஆரம்ப பள்ளியில் இரண்டு முஸ்லிம் சிறுவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்மிக்கையை அவர்களுக்குள் வைத்திருந்தனர். அவர்களில் சிறியவர் அலி, கூட்டாக (ஜமாத்தாக) தொழுவதை மறுத்து வந்தார்.

நான் எப்போதும் கடவுளிடம் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொள்வேன்.  உதவிக்காக எப்போதும் கடவுளையே வேண்டினேன். நான் 11-12 வயதிருக்கும் போதே இறைவன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பினேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நான் வைத்திருந்த ஒரு கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை என்று உணர ஆரம்பித்தேன்.

அந்த சமயத்தில் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் நான் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் “இஸ்லாம் என்பது ஒரு கொடுமையான மதம்” என்றும் “அது பெண்களை துச்சமாக மதிக்கிறது” என்பது மட்டும் தான். மேலும் எங்களுக்கு பள்ளிக்கூடங்களிலே “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது” என்று  பயிற்றுவிக்ககப்பட்டது.

மேலும் “இஸ்லாத்தில் பெண்கள் என்பவர்கள், ஆடைகள் மூலம் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு போகப் பொருள்” என்றும், “முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்குகிறார்கள்” என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் ஏதாவது ஒரு முஸ்லிம் பெண்மணி (எங்கள் ஊரில் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்) அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, நான் எனக்குள் ‘நீங்களாகவே எப்படி இதைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொள்வேன். உண்மையில் அந்த அளவிற்கு முஸ்லிம்களின் மேல் அதிக ஆத்திரமும் வெறுப்பும் எனக்கு ஏற்பட்டது.

அதனால் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் நான் வெறுப்படைந்தேன். ஆனால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் இது இதற்கு முன்பு நான் அறியாமல் இருந்த ஒன்றாகும்.

நான் யூத, ஹிந்து மற்றும் புத்த மதங்களைப்பற்றி ஆராய்ந்தேன். ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனால் கற்பனை செய்யப்பட்டு மற்றும் முரண்பாடுகளோடு கூடிய மதங்களாக எனக்கு தோன்றின. ஒரு நாள், எது என்னை துண்டியது என்று தெரியவில்லை,  மதங்களைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்க என் மனம் நாடியது. மேலும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது போல உண்மையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை தான் நம்புகிறார்களா? என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன். ஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் “இஸ்லாத்தின் அடிப்படைகள்” (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது. அந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது? என்ற ஊசலாட்டங்கள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன். இஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.

நான் முஸ்லிமாக ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆயினும் அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு கிடைத்த எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திரு குர்ஆனை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். நடுத்தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்ததால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இது என்னை தடுத்து நிறுத்தவில்லை. இது மொழி பெயர்ப்பு என்று அறிந்திருந்தேன். ஆயினும் அதிலிருந்து படித்தவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தது. இஸ்லாம் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு மார்க்கம் என்பதையும் அதிலிருந்து திரும்புதல் என்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நான் உண்மையில் எதையும் தீர்மானிப்பதற்கு முன் மிகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இரண்டரை வருட படிப்பின் முடிவில் 1997 ஜனவரியில் சாட் ரூம் (chat room) என்பது  என் வாழ்க்கையை மாற்றியது.  இஸ்லாமிய இனைய தளத்தின் விவாத மேடையில் (chat room) மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்கள். இரண்டாவது தடவை அங்கே சென்ற போது உலக மக்கள் எல்லோர் முன்னிலையில் நான் “வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதராவார்கள்” என்ற சாட்சியைச் சொல்லி முஸ்லிமாக மாறினேன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

4 thoughts on “சோஃபி ஜென்கின்ஸ் ன் இஸ்லாத்தை நோக்கிய பயணம்”
  1. அன்புக்கு இனியவர்களே!இந்த சகோதரியை பார்த்திங்களா?இந்த சகோதரிபோன்று இன்னும் பல சகோதர சகோதரிகளே இந்த (தமிழ்)சாட்டிங்ரூம் மூலம் வென்று எடுக்கலாம்,இன்ஷா அல்லாஹ்…

  2. INSHA ALLAH INTHA SAGOTHARIKKU ALAH SUBHANAVATHAALAAH ELLA NANMAIYAYUM AZHIPPANAGA ………. ANAITHU NARGARIYANGALILUM ONRAKKUVANAGA AAMEEEN………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *