சூஃபி ஷெய்குவை பின்பற்றினால் தான் மோட்சம் கிடைக்குமா?
இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அல்-குர்ஆன் மற்றும் ஆதராப்பூர்வமான ஹதீஸ்களின் வழிகளின் வாயிலாக அறிவித்தவை மட்டுமே!
மேலும் அல்லாஹ்வும் தனது திருமறையிலே மார்க்கத்தைப் பூரணப்படுத்திவிட்டதாகக் கூறுகின்றான்!
நபி (ஸல்) அவர்களும், ‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவன் புகுத்தினால் அவைகள் நிராகரிக்கப்படும்’ என்று எச்சரித்திருக்கின்றார்கள்!
‘சூஃபியிஸம்’ என்பது நபி (ஸல்) அவர்களாலோ அல்லது அவர்களைப் பின்பற்றிய சஹாபாக்கள், தாபியீன்கள் அல்லது தபஅ தாபியீன்களாலோ பின்பற்றப்பட்ட ஒரு வழிமுறையன்று!
மாறாக, பிற்காலத்தில் வழிகெட்ட ஷீஆக்களின் கொள்கையின் அடிப்படையில் ஷைத்தானிய சிந்தனையின் விளைவாக இஸ்லாத்தில் விசமிகளால் தினிக்கப்பட்டதே ‘சூஃபியிஸம்’ என்றால் அது மிகையாகாது!
சூஃபியிஸம் என்றாலே அது பின்வரும் கொள்ககைளை அடிப்படையாகக் கொண்டது!
1) மனிதன் ‘பனாஹ்’ என்ற நிலையை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலக்க முடியும்
2) இறைவனே மனிதனாக அவதரிக்கின்றான்!
3) அனைத்துப் பொருள்களுமே அல்லாஹ்வின் தஜல்லியாக, வெளிப்பாடாக இருக்கின்றது!
மேற்கண்ட மூன்று வகை சித்தாந்தங்கள் தான் சூஃபியிஸத்தின் அடிப்படைகள்!
ஒருவன் இவற்றைப் பின்பற்றினால், அவன் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரையும் நிராகரித்தவனாவான்!
ஏனெனில் ‘அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலாக அர்ஷினில் உயர்ந்துள்ளான்’ என்று திருமறையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் கூறிக் கொண்டிருக்க,
வழிகெட்ட சூஃபிகளோ, ‘இல்லை! இல்லை! அல்லாஹ் தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்’ என்று துருப்பிடித்த பழங்கால கிரேக்க மூடக்கொள்கையான பான்தீஸிய (pantheism) சித்தாந்தங்களை உளறிக்கொட்டி வருகின்றனர்!
‘அல்-குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றினால் நீங்கள் நேர்வழியை அடையலாம்’ என்று அல்லாஹ்வின் கூற்று பறைசாற்றிக் கொண்டிருக்க,
வழிகெட்ட சூஃபியிஸ சித்தாந்தமோ, ‘நீங்கள் மலத்தைச் சுமந்து நிற்கும் மனிதனிடம் உங்களின் பகுத்தறிவை அடகுவைத்து விட்டு அவரின் காலைத் தொட்டு அவரை வணங்கி, அவரின் சொல் கேட்டால் தான் மோட்சம் அடைய முடியும்’ என்று பிதற்றித் திரிகின்றனர்!
இறைக்கட்டளைகளைவிட அல்லாஹ்வின் அடிமைகளை, அதுவும் ஏழுவானங்களின் மேல் உயர்ந்துள்ள அல்லாஹ்வின் கூற்றுக்களை நிராகரித்து,
‘படைத்தவனான அல்லாஹ்வும் மலத்தை சுமந்து நிற்கும் அற்ப விந்துளியின் மூலமாக பிறந்த மனிதனும் ஒன்று’
என்று கூறி, அல்லாஹ்வின் வல்லமைகளைக் கேலிக் கூத்தாக்குகின்ற வழிகேட்டின் உச்சத்திலிருக்கின்ற, சூஃபிகள் ‘ஞானிகள்’ என்று போற்றுகின்ற, ‘செய்குமார்ககளின் மாணவராகாதவரை நீங்கள் முக்தி, மோட்சம் பெற முடியாது’ என்று உளறுகின்றனர் ஷைத்தானின் தோழர்களாகிய சூஃபியிஸவாதிகள்!
ஆம்! இவர்கள் மனித உருவிலிருக்கும் சைத்தானின் ஆசிபெற்ற போலி ஷெய்குமார்களிடம் மாணவராகச் சேர்வதன் மூலம் இவர்கள் நரகத்திற்கு நேரடி முன்பதிவு செய்கின்றார்கள்!
ஏனெனில், ‘அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்மவமான ஹதீஸ்களை நிராகரித்து அல்லாஹ்வின் வல்லமையையும் அவனின் கண்ணியத்தையும் சிதைக்கின்ற இந்த சூஃபியிஸ வழிகேட்டில் இருப்பவன் எவ்வாறு தம்மை முஸ்லிம் என அழைத்துக் கொள்ள முடியும்?
சூஃபியஸம் வேறு! இஸ்லாம் வேறு!
‘இஸ்லாத்தில் இருப்பவன் சூஃபியிஸத்தில் இருக்க முடியாது!’
‘சூஃபியிஸத்தில் இருப்பவன் ஒருபோதும் இஸ்லாத்தில் இருக்க முடியாது!’
சுருக்கமான மிகச் சிறந்த விளக்கம் அறிவுடையோர் பிரயோசனம் அடைவர். இன்ஷா அல்லாஹ்
ஏன் அல்லாஹ் ஒரே வினாடியில் அவனின் கோட்பாடுகளை அனைத்து மனிதர்களுக்கும் மூளையில் பதிவிறக்கவில்லை.