தொழுகையின் போது காற்றுப் பிரிந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது?
உளூவை முறிக்கும் அனைத்துக் காரியங்களும் தொழுகையை முறித்து விடும். அந்த வகையில் பின் துவாரத்தின் வழியே காற்றுப் பிரிந்தால் தொழுகையும் முறிந்து விடும். ஆனால் ஒருவர் தம்முடைய பின் துவாரத்தின் வழியே காற்றுப் பிரிந்து விட்டது என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அவர் தொழுகையை விட வேண்டும். சந்தேகமாக இருந்தாலோ அல்லது உறுதியாக தெரியாமல் இருந்தாலோ அல்லது காற்றின் சப்தத்தைக் கேட்காத வரை அல்லது அதன் வாடையை உணராத வரை தொழுகையை விடத் தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
‘ஒருவர் தொழுகையில் இருக்கும் போது பின் துவாரத்தின் வழியே காற்றுப் பிரிந்து விட்டது என்ற சந்தேகம் வந்தால், அவர் காற்றின் சப்தத்தையோ அல்லது அதன் துர்வாடையையோ உணராத வரையில் தொழுகையை விடத் தேவையில்லை’
மேலும் இது ஷைத்தானின் ஊசலாட்டங்களை நீக்கும் முக்கிய அம்சமாகும்.
ஆதாரம் : அபூதாவுது மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு.