அறிவுடையோரின் பிரார்த்தனைகள்
“நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து,
‘எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!’ (என்றும்;)
‘எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;
மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!’ (என்றும்;)
‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்;
‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக;
இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!’ (என்றும்;)
‘எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக!
கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக!
நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல!
(என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்). (அல்-குர்ஆன் 3:190-194)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஈமான் கொண்ட முஸ்லிம்களுக்காக தங்களின் இந்த முயற்சி இறைவனின் அங்கீகாரம் பெற்று அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்களாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சிறந்த கூலியை தர இறைவனிடம் பிராத்திக்கின்றேன்