சத்தியப் பாதை – கவிதை

பாதையிலும் சத்தியம் அசத்தியமுண்டா?
இது சிலரது கேள்வி!
சத்தியமும் அசத்தியமும்
சர்ச்சை செய்தால் தான்
சச்சரவற்ற வாழ்க்கை புலரும்!

சத்திய மார்க்கம், சத்திய வழி
சத்தியப் பாதை.. ..
சகலமும் சந்தோஷ முடிவைத்
தேடும் சாலைகள்!

இரவைத் துரத்தும் பகல்
இது – இன்றியமையாப் பயணம்.
நிழலைக் கலைக்கும் வெயில்
இது – இயற்கையின் விளையாட்டு!

சத்தியத்தைச் சரிய வைக்கும் அசத்தியம்
இது – பாதாளத்துக்கு பவனிதரும் பள்ளக்கு!

உண்மையை உருக்குலைத்து
ஊமைக் கதைகள் பேசி
சத்தியத்தை சாகடிக்கும் சாத்தானியர்கள்!

காலத்தைக் கடத்திவிட்டு
கலாச்சார மோசடி நடாத்திவிட்டு
கலங்கமற்ற சத்தியத்தை
கண்ணீரோடு தவழவிடலாமா?

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed