பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
ஓ மனிதா! உனக்கொரு வினா!
உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
படைப்பினங்கள் பலவிருக்க உனக்கு மட்டும் பகுத்தறிவு!
நன்மை தீமை எதுவென்று எளிதாய்ப் பிரித்தறிய ஆறறிவு!
உண்மையை உணர்ந்து கொள்ள உரை கல்லாய் அவ்வறிவு!
ஒரு பேனா வாங்கப் போனால் கூட பகுத்தறிவை சரியாகப் பயன் படுத்துகிறோம்.
அது எழுதுகிறதா? இல்லையா?
கருப்பு நல்லதா? நீலமா?
அந்த நாட்டு உற்பத்தியா? இந்த நாட்டா?
பல கேள்விகள்! அங்கே எம் பகுத்தறிவுக்கு நாம் வேலை கொடுக்க மறப்பதில்லை!
ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்
நாம் கொண்ட கொள்கையில் மட்டும் அவ்வறிவுக்கு
எள் முனையளவேனும் இடம் கொடுப்பதில்லையே!
கடந்துவிட்ட உன் வாழ்க்கை
உனக்கு ஒரு படிக்கட்டுகளாய் அமையட்டும்.
நாளைய பொழுதுகள் தேனாகட்டும்