என் கதி என்ன? – கவிதை

என்னை –
உதறியது நம் சமூகம்!
வேண்டாதவனாய் வீழ்ந்து கிடக்கின்றேன்.
வெட்கித் தலை குனிய எனக்கேது சொரனை!!

சலித்ததுவே என் வாழ்க்கை!
காலம் – மாற்றிடுமா என் போக்கை?!
தடை தாண்டிய பேச்சுக்கள் தான்
அறுத்துடுமோ என் நாக்கை?!

கல் நெஞ்சனாய் மாறுவேனா?
காடே கதியன்று போவேனா?
இல்லை –
பாதியிலே எனையிழந்து பரிதவித்துப் போவேனா?

புதிய வாழ்க்கை தனைப் புனைவேனா?
புத்தம் புதியன செய்வேனா?
இல்லை –
பழமைதனைப் புதிதாய் முடிவேனா?

வாழ்க்கை என்பது பிழிந்தெடுத்த தேனா?
இல்லை-
பூச்சிகளுக்கப்பால் பதுங்கியிருப்பது தானா?

பாசம் என்பது வீணா?
அது போலி வேஷம் தானா?
இல்லை –
போகப் போக மாறும் தானா?

அன்பு எனக்கு ஒளிவிளக்கு!
அனைவரிடமும் இருந்தால் – நலம் நமக்கு.
அது இல்லாததால் தானே நாடே நாறிக் கிடக்கு!

போலிவாழ்க்கை ஒரு சுவரொட்டி!
பொய்ப் பிரச்சாரம் கண்டால் நில் எட்டி!
பசியென்றாலும் வாயில் தினித்துவிடாதே அது சுடு ரொட்டி!
நிலைப்பது ஓரிரு நாட்களே!

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed