தொழும் போது அடிக்கடி காற்று பிரிந்தால் என்ன செய்வது?
வாசகர் கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்). எனக்கு வாயு பிரச்சனை இருக்கிறது. அதனால் தொழும்போது அடிக்கடி காற்று பிரிகிறது. நான் மறூபடியும் உளூ செய்து விட்டுத் தான் தொழ வேண்டுமா? தயவு செய்து தீர்வு தாருங்கள். சஹானா, யாஹூ மின்னஞ்சல் வழியாக!
பதில் :
வஅலைக்கு முஸ்ஸலாம்.
அடிக்கடி காற்று போகக் கூடியவர்களுக்கு இரு ஒரு பெரிய பிரச்சினையான விடயமாகத் தெரிவதால் இப்படி கேட்கிறார்கள். தொடர்ந்தும் தொழலாம்! அது தொழுகையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பெண்களைப் பொறுத்தவரை சில நேரங்களில் பின் துவாரம் தவிர்ந்த முன்துவாரம் வழியாகவும் சிலருக்கு காற்று போன்ற தொடர் நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. இதனால் சிலர் சங்கடத்துக்குள்ளாகின்றனர். ஆனால் இவை ஒன்றும் நமது கடமையான தொழுகையை நிறைவேற்றுவதை விட்டும் தடுக்க மாட்டாது.
தொழுது விட்டு அடுத்த தொழுகைக்காக காத்து இருக்கும் போது காற்று பிரிந்தால் உளூ செய்து விட்டுத்தான் அடுத்த தொழுகையை தொழ வேண்டும் என்பதையும் கவணத்தில் கொள்க!
ஒரு பெண்ணுக்கு சில நேரங்களில் மாதாந்த ருது முடிவடைந்த பின்னரும் ‘இஸ்திஹாளா’ என்று கூறப்படும் இரத்தம் போன்ற ஒரு திரவம் வெளியேறினாலும் இந்த சட்டம்தான். அவர் வழமையான தவணை முடிவடைந்ததும் குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் தொழுவதைப் போன்ற சட்டம்தான் இங்கும் கையாளப்படும்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.