மறதியால் விடுபட்ட தொழுகையை எப்போது தொழவேண்டும்?

எவரொருவர் தூக்கத்தினாலோ அல்லது மறதியாலோ ஒரு குறிப்பிட்ட தொழுகையை தொழவில்லையோ அவர் தூங்கி எழுந்தவுடன் அல்லது ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.

அபூ கதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்: – தொழுகை நேரத்தில் துங்குவதைப்பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது தூக்கத்தில் கவனக்குறைவு இல்லை. ஆனால் கவனக் குறைவு என்பது விழித்திருக்கும்போது ஏற்படுவதாகும் என்று பதிலளித்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: – யாராவது மறதியினால் தொழுகையை விட்டுவிட்டால் அவர் ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும் அதற்கு பரிகாரம் எதுவும் இல்லை.

முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்: – வித்ரு தொழுகையை உங்களின் இரவின் கடைசி தொழுகையாக ஆக்குங்கள்.

ஸஜ்தா செய்வதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள்: –

1) சூரியன் அடிவானில் உதயமாவதில் இருந்து அது முழுமையாக உதயமாகும் வரை உள்ள நேரங்கள்.

2) சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது.

3) சூரியன் அடிவானில் மறைய ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக மறையும் வரை உள்ள நேரம். (ஆதாரம் : அஹ்மத் மற்றும் முஸ்லிம்)

மேற்கண்ட மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னுடைய இறைவனுக்காக ஸஜ்தா செய்வதற்கு எந்த தடையும் இல்லை. எனவே மேலே சொன்ன மூன்று நேரங்களை தவிர்த்து ஒரு விடுபட்ட தொழுகையை ஞாபகம் வந்தவுடன் தொழவேண்டும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *