தொழுகையில் குர்ஆனை எந்த வரிசையில் ஓதவேண்டும்?
நபி (ஸல்) அவர்கள், பொதுவாக உபரியான அல்லது கடமையான தொழுகைகளில் குர்ஆனை ஓதும் போது அது எந்த வரிசையில் தொகுக்கப்பட்டிருக்கிறதோ அதே வரிசையில் தான் ஓதுவார்கள்.
ஆனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் படி சில சமயங்களில், கீழிலிருந்து மேலாக ஓதியதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே ஒருவர் கீழிருந்து மேலாக ஓதினாலும் அதுவும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் உள்ளதால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது. இதனால் அவருடைய தொழுகையில் பாதிப்பு எதுவும் இல்லை என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் பொதுவாக குர்ஆன் தொகுக்கப்பட்ட வரிசையில் ஓதி வந்துள்ளதால் நாமும் அந்த முறையில் ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.