பெண்களுக்கு ஒரு பெண் இமாமாக தொழுகை நடத்தலாமா?
ஒரு பெண் மற்ற பெண்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துவது விரும்பத்தக்கது: –
ஒரு பெண் மற்ற பெண்களுக்கு மட்டும் இமாமாக நின்று தொழுகை நடத்த இஸ்லாத்தில் எந்த வித தடையும் இல்லை. ஆனால் அந்த பெண் இமாம் மற்ற பெண்களுக்கு முன்னின்று தொழுகை நடத்தாமல் முதல் வரிசையில் மற்ற பெண்களுக்கு நடுவில் நின்றுக் கொண்டு தொழுகை நடத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பெண்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துவார்கள்; முதல் வரிசையில் பெண்களுக்கு நடுவில் நிற்பார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் (உம்மு ஸலமா) அவர்களுக்கு வீட்டிலுள்ள பெண்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்த உத்தரவிட்டு, வரகா (ரலி) அவர்களை அங்கு சென்று அவர்களுக்காக பாங்கு கூற நியமித்தார்கள். ஆதாரம் பிக்ஹ் சுன்னாஹ் 2.58